நம் அடிப்படைத் தேவைகளைப் போல, அன்றாட வாழ்க்கைக்கு வாகனங்களும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. வாகனம் என வரும்போது, பைக்(Bike), கார் என இரண்டுமே மனதில் இடம்பிடிக்கின்றன.
இருப்பினும், அதில் பைக் என்பது, நினைத்த நேரத்தில் விரும்பிய இடத்திற்குச் செல்ல உதவும். கார் என்பது தனி கவுரவமாக இருந்தாலும், சென்னை போன்ற பெருநகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் செல்வது சற்று சிக்கல் நிறைந்ததே. எனவே பெரும்பாலானோரின் தேர்வும் பைக், ஸ்கூட்டர் ஆகியவற்றிலேயே அமைகிறது.
எனவேதான் ஏராளமானோர் பைக், ஸ்கூட்டர் போன்ற டூவீலர்களை விரும்பி வாங்குகின்றனர். பைக் வாங்குவோரில் பலர் டூவீலர் கடன் வாயிலாக வாங்குகின்றனர். அப்படி நீங்களும், உங்கள் மனம் கவர்ந்த பைக்கை, வங்கிக்கடன் மூலம் வாங்க விரும்புகிறீர்களா?
டூவீலர் கடன் வாங்குவதற்கு முன் எந்த வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும் என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இதனால் மாதம் தோறும் EMI சுமை குறைவது மட்டுமல்லாமல் மொத்த செலவுகளும் குறையும்.
எனவே, குறைந்த வட்டிக்கு பைக் கடன் வழங்கும் வங்கிகளை பற்றித் தகவலை உங்களுக்குப் பட்டியலிடுகிறோம்.
Bank of India (பேங்க் ஆஃப் இந்தியா) - 6.85%
Central Bank of India (சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா) - 7.25%
Jammu & Kashmir Bank (ஜம்மூ காஷ்மீர் வங்கி) - 8.45%
Punjab National Bank (பஞ்சாப் நேஷனல் வங்கி) - 8.65%
Punjab Sind Bank (பஞ்சாப் சிந்த் வங்கி) - 8.8%
Axis Bank (ஆக்ஸிஸ் வங்கி) - 9%
Union Bank of India (யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா) - 10%
மேலும் படிக்க...
Share your comments