தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் கிராமப்புறப் பெண்களுக்கான திருமண உதவித்திட்டங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சமூக நலத்துறையின் சார்பிலான கிராமப்புற பெண்களுக்கான திருமண உதவி திட்டங்கள் 5 வகையான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இப்படிப் பலத் திட்டங்கள் இருந்தும்கூட மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையே உள்ளது.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவி திட்டம்
-
1985ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பு இல்லை.
-
மணப்பெண் 18வயது நிரம்பிய வராக இருக்க வேண்டும்.
-
பட்டதாரிகளுக்கு ரூ.50,000மும், மற்ற படித்த பெண்களுக்கு ரூ.25,000மும்
காசோலையாக வழங்கப்படுகின்றன.
-
அத்துடன் 8கிராம் தங்கம் தாலி செய்ய இலவசமாக வழங்கப்படுகின்றன.
-
திருமணத்திற்கு 40நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.
முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண திட்டம்
-
1967 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது இந்தத் திட்டம்.
-
சாதி மறுப்புக் கலப்பு திருமண செய்துள்ள தம்பதிகளில் ஒருவர் கண்டிப்பாக பட்டிலின மற்றும் பழங்குடியின வகுப்பினர் ராக இருக்க வேண்டும்.
-
மற்றவர் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ராக இருக்க வேண்டும்.
-
இதில் பட்டதாரியாக இருந்தால் ரூ.30,,000 காசோலையும் ரூ. 20,000 ரூபாய்க்கான சேமிப்பு பத்திரமும், வழங்கப்படும்.
-
மற்ற வர்களுக்கு ரூ.15,000 யும், ரூ.10,000 சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும்.
-
திருமண செய்த நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள்
விண்ணப்பிக்கலாம்.
ஈ. வே. ரா. மணியம்மை நினைவு திருமண திட்டம்.
-
கடந்த1981 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது இத்திட்டம்.
-
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
-
மணப்பெண்ணின் வயது18,பூர்த்தி யாக உள்ள நிலையி்ல் விண்ணப்பிக்க முடியும்.
-
பட்டதாரியாக உள்ள பெண்களுக்கு ரூ.50,000 மும், மற்றவர்களுக்கு
ரூ.25,000மும் வழங்கப்படுகின்றன.
-
நாற்பது நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்கலாம்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்
-
இது 1989ஆம் ஆண்டில் இருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
-
பட்டதாரி மற்றும் பட்டயக்கல்வி படித்தவர்களுக்கு ரூ.50,000யும் பத்தாவதுவரை படித்தவர்களுக்கு ரூ.25000யும் காசோலையாக வழங்கப் படுகிறது.
-
மலை வாழ் பழங்குடியினர் ஐந்தாவது படித்து இருந்தால்கூட விண்ணப்பிக்கலாம்.
-
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருக்க முடியும்.
-
நாற்பது நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.
டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை திருமண உதவி திட்டம்
-
1975ம் ஆண்டு முதல் இந்த விதவை திருமண திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
-
மணமகளுக்கு வயது குறைந்த பட்சமாக 20 ஆக இருக்க வேண்டும்.
-
மணமகனுக்கு 40வயது மிகாமல் இருக்க வேண்டும்.
-
கணவன் இறந்த சான்று மட்டும் மறுமண பத்திரிகை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
-
பட்டதாரியாக இருந்தால் ரூ.30,000மும், ரூ.20,000 சேமிப்பு பத்திரமாக வழங்கப்படுகிறது. 8கிராம் தங்கமும் இலவசமாக வழங்க படுகின்றன.
-
6மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க லாம்.
-
மேற்கண்ட திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்படுத்தப் பெண்கள் முன்வரவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
சந்தேகம் இருந்தால், அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
தகவல்
அக்ரி. சு.சந்திரசேகரன்
வேளாண் ஊராட்சிமன்றம்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
Share your comments