தனியார் ஊழியர்களும், சொந்தமாகத் தொழில் செய்பவர்களும், கூலி வேலை செய்பவர்களும் 60 வயதுக்கு பிறகு மாதம் 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெறலாம். இதற்காக மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை வழங்கி வருகிறது. அடல் பென்ஷன் யோஜனா திட்டம் கீழ் 18 முதல் 40 வயது உள்ளவர்கள் கணக்கு தொடங்கலாம். குறைந்தது மாதம் 42 ரூபாய் முதல் முதலீடு செய்யத் தொடங்கினால் போதும். 60 வயதுக்குப் பிறகு மாதம் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை பென்ஷன் கிடைக்கும்.
தகுதிகள் (Qualifications)
18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் யார் வேண்டும் என்றாலும் அடல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கலாம். கணக்கு தொடங்கும் போது வயது அதிகமாக இருந்தால் முதலீடு தொகை அதிகரிக்கும். அடல் பென்ஷன் கணக்கைத் தொடங்க வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.
பென்ஷன் தொகை (Pension Amount)
அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ் 5 அடுக்குகளில் ரூ.1000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000 மற்றும் ரூ.5000 என பென்ஷன் பெறலாம். பென்ஷன் தொகைக்கு ஏற்றவாறு முதலீடு செய்ய வேண்டிய தொகையும் மாறும்.
பங்களிப்பு (Share)
பென்ஷன் தொகையை மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு என்ற தவணைகளில் பெறலாம். முதலீடு தொகை மாதம் ரூ.42 முதல் ரூ.1,454-க்குள் இருக்கும். சேமிப்பு கணக்கிலிருந்து மாத தவணை பிடித்தம் செய்யப்படும். தவணை தொகையும் மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு தவணைகளில் செலுத்தலாம்.
அபராதம் (Fine)
பென்ஷன் பங்களிப்பு தவணையைச் செலுத்தத் தாமதம் ஆனால் ஒவ்வொரு 100 ரூபாய்க்கு 1 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். தொடர்ந்து தவணை பங்களிப்பைச் செலுத்தத் தவறினால் கணக்கு மூடப்படவும் வாய்ப்புள்ளது.
பென்ஷன் தொகையை முடியும் போது கூட்டியும், குறைத்தும் கொள்ளலாம். ஆனால் இதை ஆண்டுக்கு ஒரு முறை ஏப்ரல் மாத மட்டுமே செய்ய முடியும்.
மேலும் படிக்க
Share your comments