1. Blogs

MRP-ஐ விடவும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

R. Balakrishnan
R. Balakrishnan

MRP

MRP என்பது ஒரு தயாரிப்பு அல்லது சேவையை வாங்குவதற்கு வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படும் அதிகபட்ச விலையாகும். MRP என்பது ஒரு பொருளின் உற்பத்தி செலவு, போக்குவரத்து மற்றும் உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளரால் ஏற்படும் பிற செலவுகள் மற்றும் வரிகள் ஆகியவற்றைச் சேர்த்துதான் கணக்கிடப்படுகிறது.

நீங்கள் பொருட்கள் வாங்கும் கடையில், அக்கடைக்காரர் எம்ஆர்பியை விட அதிகமான விலையை வசூலிப்பதை உணர்ந்தால், கடை அமைந்துள்ள மாநிலத்தின் சட்ட அளவியல் துறையிடம் (Legal Metrology Department) உடனடியாக புகார் அளிக்கலாம்.

ஹெல்ப் லைன் (Helpline) 

நுகர்வோர் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் எண் - 1800-11-4000/ 1915 ஐத் தொடர்பு கொள்ளவும் அல்லது அவர்களின் தனிப்பட்ட மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் மன்றத்தில் புகார் அளிக்கவும் வசதி உள்ளது. ஒரு நுகர்வோர் 8800001915 என்ற எண்ணிற்கு SMS அனுப்பலாம் அல்லது NCH ஆப் மற்றும் Umang ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

கடைக்காரர் எம்ஆர்பியை விட அதிகமாக வசூலித்தால், https://consumerhelpline.gov.in/user/signup.php என்ற இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் நுகர்வோர் ஆன்லைனில் புகார் செய்ய முடியும். நேஷனல் கன்ஸ்யூமர் ஹெல்ப்லைன் என்பது வழக்குக்கு முந்தைய முதல் படியாகும்.

அபராதம்

நீங்கள் புகார் செய்தும் பலனில்லை எனில் NCDRC இணையதளம், மாநில ஆணையம் மற்றும் மாவட்ட ஆணையம் போன்ற பொருத்தமான நுகர்வோர் ஆணையத்தை நேரடியாகவே அணுகலாம். விசாரணைக்குப் பிறகு விதிமீறல் கண்டறியப்பட்டால், அக்கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்படலாம். அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட தொகைக்கு இழப்பீடு பெற நுகர்வோருக்கும் உரிமை உண்டு என்பதை நினைவில் கொள்ளவும்.

மேலும் படிக்க

QR கோடு மூலம் ரயில் டிக்கெட்: பயணிகள் வரவேற்பு!

அதிக பென்சன் தரும் சூப்பரான LIC பாலிசி!

English Summary: What to do if you sell products at a higher price than MRP?

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.