திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, உயிருடன் உள்ளவரை இறந்ததாகக் கூறி, ஆதார் மற்றும் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபத்தமானத் தவறு
மனிதர்களின் செயல்பாடுகளில் எப்போதாவது தவறு நிகழ்வது சகஜம். ஆனால் அது, சற்று அபத்தமானதாக இருக்கும்போது, எல்லோர் மனதிலும் எரிச்சலையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தாமல் இல்லை.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் - சாமளாபுரம் பேரூராட்சி, அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி. 52 வயதான இவர் ஒரு விசைத்தறி உரிமையாளர். ஆதார், ரேஷன் கார்டில் இவரது பெயர் திடீரென நீக்கப்பட்டது.
ரேஷன் கடையில் அதிர்ச்சி
இது குறித்து, அவர் கூறியதாவது: ரேஷன் கார்டில் பொருள் வாங்க கடைக்கு சென்றேன். எனது பெயர் நீக்கப்பட்டு விட்டதாக விற்பனையாளர் தெரிவித்தார். இதனால், இலவச புகார் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, நான் இறந்துவிட்டதாகவும் அதனால் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பெயர் நீக்கம் (Name deletion)
ஆதார் அட்டையிலும் பெயர் நீக்கப்பட்டதை அறிந்தேன். உயிரோடு இருக்கும் நான் இறந்து விட்டதாக கூறி, ஆதார், ரேஷன் கார்டில் திடீரென பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. இது குறித்து, பல்லடம் வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன் என்றார்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், 'முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வரும் ரேஷன் கார்டுகள் தமிழகம் முழுவதும் நீக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன. வேலுசாமியின் ரேஷன் கார்டும் அவ்வாறு தவறுதலாக நீக்கப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி உள்ளோம்' என்றனர்.
அலட்சியத்தின் உச்சம் (The pinnacle of indifference)
இருப்பினும், உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டார் எனக்கூறி ஆதார் மற்றும் ரேஷன் அட்டையில் பெயரை நீக்கம் செய்வதெல்லாம் அதிகாரிகளின் அலட்சியத்தின் உச்சம்.
நபர் இறந்துவிட்டதற்கான இறப்பு சான்றிதழ் அந்த மாநகராட்சியில் பதிவு செய்யப்படாதபோது, எப்படி பெயர் நீக்கத்திற்கான நடைமுறைகளை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர் என்பது பதில் கிடைக்காதக் கேள்வியாகவே உள்ளது.
மேலும் படிக்க...
Share your comments