1. Blogs

ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகும் இளம் தலைமுறை: நோய்கள் இலவசம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Young generation addicted to smart phones

நவீன மயமாய் மாறி வரும் உலகில், ஸ்மார்ட் போன் இல்லாமல் யாரும் இருப்பதில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளையும் ஆக்கிரமித்து விட்டது இந்த ஸ்மார்ட் போன். 74% இந்தியர்கள், ஸ்மார்ட் போனை படுக்கைத் துணையாக வைத்து, உறங்குவதாக தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட்போன் பழக்கத்தால், பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கிறது ஆய்வு முடிவுகள்.

ஸ்மார்ட் போன் (Smartphone)

30 வயதுக்கு உட்பட்ட 3,800 நபர்களிடம், ஆய்வு ஒன்றை நடத்தியது சிஸ்கோ எனும் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனம். இதில், ஏராளமானோர் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், ஸ்மார்ட்போன் கையில் இல்லையென்றால், நோமோபோபியா எனப்படும் ஒருவித பய உணர்வு இவர்களுக்கு தோன்றுகிறது. இதிலிருந்து மீண்டு வர, மறுவாழ்வு மையங்களும், தற்போது தொடங்கப்பட்டு வருகிறது.

நோய்கள் (Disease)

ஸ்மார்ட்போன் பயன்படுத்திய பிறகு முதுகு வலி பிரச்சினைகளை, இளைஞர்கள் எதிர்கொள்கிறார்கள் என்று பிரிட்டிஷ் சிரோபிராக்டிக் அசோசியேஷன் குறிப்பிடுகின்றது. ஸ்மார்ட்போனை தொடர்ந்து பயன்படுத்துவதால், Occipital neuralgia என்ற நீண்ட கால பாதிப்பான நரம்பியல் நிலை உருவாகிறது. உச்சந்தலையில் இருந்து முதுகெலும்புக்கு செல்லும் நரம்புகள் சுருக்கமோ அல்லது வீக்கமோ அடைகிறது. இதனால், தீராத தலைவலி உண்டாகிறது. இவ்வலியைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை. ஆனால், யோகா மற்றும் தியானம் செய்வதன் மூலமாக ஓரளவு வலியைக் குறைக்கலாம்.

அதிக நேரம் ஸ்மார்ட் போன் திரையினை பார்ப்பதால், மனதில் ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்துகிறது. நண்பர்களுடனான உரையாடலில், குறுஞ்செய்தி வரத் தாமதமானால் அச்சம் கலந்த பதற்றத்தையும், அழுத்தத்தையும் உருவாக்குகிறது.

ஸ்மார்ட் போன் பயன்பாடு, ஓய்வு நடவடிக்கை மற்றும் உடலின் செயல்பாடு குறித்து 300 கல்லூரி மாணவர்களிடம் கணக்கெடுப்பு நடத்தினர், ஆராய்ச்சியாளர்கள். அவரக்ளுடைய இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டினை பரிசோதனை செய்தனர். 14 மணி நேரம் தொடர்ந்து ஸ்மார்ட் போனில் நேரத்தை செலவழித்தவர்களின் உடல் நிலையானது, குறைந்த பட்சம் 1.5 மணி நேரம் செலவழிப்பவர்களின் உடல் நலத்தினை விட சற்று பின் தங்கியே காணப்பட்டது.

ஸ்மார்ட்போனில் காதை வைத்துப் பேசுவதால், காதுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் ஹெட்போன் பயன்படுத்தி, பாடல்கள் கேட்கும் போது சற்று கவனமாகவே இருக்க வேண்டும். காதின் உட்புறம் வளர்ந்துள்ள சிறு சிறு முடிகள், இரசாயன சிக்னல்களை நரம்புகள் மூலம் மூளைக்கு அனுப்புகிறது. அதிக அளவு சத்தத்தினால் இந்த முடிகள் சேதமடைய வாய்ப்புகள் அதிகம்.

ஸ்மார்ட் போன்கள் நம்மை இந்த சமூகத்திடமிருந்து விலக்கி வைப்பதோடு, நெருங்கியவர்களுடன் செலவழிக்கும் நேரத்தை வீணடிக்கிறது. இதன் பயன்பாடுகள், நம்மை ஒரு சுயநலவாதியாக மாற்றுவது முற்றிலும் உண்மை. சொல்லப் போனால், நம் மனிதத் தன்மையைப் பறித்து, மனிதநேயம் அற்றவனாக மாற்றுகிறது இந்த ஸ்மார்ட் போன்.

மேலும் படிக்க

முதுகுத் தண்டு பாதிப்பும், காரணங்களும்!

உலகிற்கு அடுத்த பேராபத்து: சீனாவில் மனிதருக்கு பரவிய பறவைக் காய்ச்சல்!

English Summary: Young generation addicted to smart phones: Diseases free! Published on: 30 April 2022, 11:48 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.