1. விவசாய தகவல்கள்

100 நாள் வேலைத்திட்டம் - நாடு முழுவதும் கூலி உயர்வு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
100 day program - nationwide wage increase!
Credit : Maalaimalar

நாடு முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்த கூலி உயர்த்தப்பட்டுள்ளது.

வேலை உறுதித் திட்டம் (Job Guarantee Scheme)

மத்திய அரசு சார்பில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பெயரில் இந்த வேலைவாய்ப்புத்திட்டம் (MNREGA)நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால், கூலித் தொழிலாளர்களுக்கு வருடத்தில் 100 நாள் உறுதி செய்யப்படுவதுடன், அவர்களது குடும்பங்கள் பட்டினியின்றி வாழ வழிவகை செய்துள்ளது அரசு.

100 நாள் வேலை உறுதி (100 day work commitment)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஏரி தூர் வாறுதல், குளம் வெட்டுதல், சாலைகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கட்டுமானப் பணிகள் (Construction work)

மேலும் நிலையான சொத்துக்களை உருவாக்கும் பொருட், கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஏப்ரல் மாதம் (In April)

இந்நிலையில் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் கூலியை உயர்த்துவதை மத்திய அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது.

கூலி உயர்வு (Wage increase)

இதன் அடிப்படையில் நாடு முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத் தொழிலாளர்களுக்குக் கூலி உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

ரூ.273 (Rs.273)

தமிழகத்தைப் பொருத்தவரை தொழிலாளர்களுக்கு இதுவரை, நாள் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த  256 ரூபாய் கூலி தற்போது ரூ.273ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மாநிலம் வாரியான கூலி உயர்வு

  • கேரளா                         : ரூ.291

  • தமிழ்நாடு                     : ரூ.273

  • புதுவை                         : ரூ.273

  • தெலங்கானா                      : ரூ.245

  • அருணாச்சல பிரதேசம்  : ரூ.212

  • பீகார்                             : ரூ.198

  • அஸ்ஸாம்                      : ரூ.224

  • இந்தக்கூலி உயர்வு 100நாள் வேலைத்திட்டத் தொழிலாளர்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளது.

மேலும் படிக்க...

தென்னையில் வேரூட்டம் பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்!

உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!

தமிழகத்தில் விளையும் மஞ்சள் இரகங்கள் என்னென்ன?

English Summary: 100 day program - nationwide wage increase! Published on: 09 April 2021, 11:05 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.