"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" - தமிழக மக்கள் நோயற்று வாழ, தமிழக அரசு, தோட்டக்கலை துறையின் மூலம் வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன் கீழ்,ஆனைமலை வட்டாரத்தில், மூலிகை தோட்டம் அமைக்க, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை, அழைப்பு விடுத்துள்ளது. ஆனைமலை வட்டாரத்தில், தோட்டக்கலைத் துறையின், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மூலிகை தோட்டம் அமைக்க, மானியம் வழங்கப்படுகிறது.
வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க, 1,500 ரூபாய் மதிப்புள்ள மூலிகை தொகுப்பு, 50 சதவீத மானியத்தில், 750 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. வகைக்கு 2 வீதம், துளசி, திருநீற்றுபச்சிலை, வல்லாரை, கற்பூரவல்லி, கற்றாழை, பிரண்டை, கீழாநல்லி, ஆடாதொடை, திப்பிலி, அஸ்வகந்தா, ஆகிய, 10 வகையான மூலிகைச் செடிகள் வழங்கப்பட உள்ளன. இவற்றுடன், 10 செடி வளர்ப்பு பைகள், 2 கிலோ வளர்ப்பு ஊடகம், 10 தேங்காய் நார்கட்டிகள், மண்புழு உரம், ஒரு தொழில்நுட்ப கையேடு ஆகியவையும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 70106 -81662, 73958- 55683 என்ற எண்களுக்கு, தொடர்பு கொள்ளலாம், அல்லது tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆனைமலை தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜமுனா தேவி அவரது செய்தி தொடர்பு அதிகாரி மூலம் தெரிவித்துள்ளார்.
அதே நேரம், தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் இந்தாண்டு மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் மூலம் திருப்பரங்குன்றம் வட்டார வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. பத்து வகையான மூலிகைச் செடிகள், செடி வளர்க்கும் 10 பைகள், வளர்ப்பு ஊடகம் 2 கிலோ, தென்னை நார் கட்டிகள் 10, தொழில்நுட்ப கையேடு வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளோர் ஆதார் நகல், பாஸ்போர்ட் போட்டோவுடன் திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்திலுள்ள தோட்டக் கலைத் துறையில் முன் பதிவு செய்யலாம். உதவி அலுவலர்கள் ஆறுமுகம் (99941 41379), ஜெயபாலன் (86678 79177), அர்ஜுன் (96779 55093) ஆகியோரையும் தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குனர் பிரபா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
G20| பசுமைக்குடில் PolyGreen House நிறுவ 70% மானியம்| TNAU வழங்கும் பயிற்சி| வெள்ளாடு வளர்ப்பு ...
PMFBY| ரூ.10000/- மானிய உதவியில் Electric motor pump set-கள்| ஆவின் பாலகம் நிறுவ 30% மானியம்
Share your comments