வெள்ளரி, குடை மிளகாய், கார்னஷன் கொய்மலர், ரோஜா கொய்மலர் போன்ற பயிர்களில் பசுமைக்குடில் (Polygreen House)/ நிழல்வலைக்குடில் (Shadenet) அமைப்பதற்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்,
அனைத்து விவசாயிகளுக்கும் 50 சதவித மானியம் வழங்கப்படுகிறது. ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவித மானியம் ஆக மொத்தம் 70 சதவிகித மானியம் வழங்கப்படும். கூடுதலாக வழங்கப்படும் மானியத்திற்காக மாநில அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
2.விவசாயக் கொள்கையை உருவாக்குவது தொடர்பான கூட்டத்திற்கு அரசு தலைமைச் செயலாளர் தலைமை தாங்கினார்
தமிழக அரசின் அங்கக வேளாண்மைக் கொள்கையை உருவாக்குதல் தொடர்பாக தலைமையில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர், துறைத் தலைவர்கள், அங்கக வேளாண் பிரதிநிதிகள், அங்கக விவசாயிகள், அங்கக வேளாண்மை சார்ந்த அரசு சாரா நிறுவனத்தினர் ஆகியோருடன் வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
3.வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 2022-23 ஆம் ஆண்டு பாசனத்திற்கு 02.12.2022 முதல் 120 நாட்களுக்கு வினாடிக்கு 175 கன அடி வீதம் (ஒரு நாளைக்கு 15.12 மில்லியன் கன அடி) தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் 24059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
4.TNAU: காளான் மற்றும் முருங்கையின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க பயிற்சி
“காளான் மற்றும் முருங்கையின் மதிப்பு கூட்டல்” என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் பயிற்சி 07 டிசம்பர் 2022 மற்றும் 08 டிசம்பர் 2022 ஆகிய தேதிகளில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அறுவடைக்குப் பின் தொழில்நுட்ப மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் மற்றும் பதப்படுத்துவது போன்ற செயல்முறை இப்பயிற்சியில் இடம்பெறும்.
5.கால்நடை வளர்ப்பு பயிற்சி ஆர்வமுள்ளவர்கள் அறிக
சேலம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வருகிற 15 டிசம்பர் நாட்க்கோழி வளர்ப்பு மற்றும் 22 டிசம்பர் வெள்ளாடு வளர்ப்பு போன்ற இலவச பயிற்சிகள் மேற்கண்ட தேதிகளில் காலை 10.30 மணி அளவில் பயிற்சி மையத்தில் நடைபெறும். தொடர்புக்கு 0427 2410408 எண்ணை அழைக்கவும்
6.மண் காப்போம் இயக்கம் வழங்கும் இயற்கை வழி மாடி தோட்ட களப் பயிற்சி
மண் காப்போம் இயக்கம் வழங்கும் திருப்பூரில் இயற்கை வழி மாடி தோட்ட களப் பயிற்சி, வருகிற 17 டிசம்பர் 2022 திருப்பூர் மாவட்டம் நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியில், மாடி தோட்டத்தில் 5 அடுக்கு சாகுபடி முறை மற்றும் மேட்டு பாத்தி அமைக்கும் நுட்பங்கள்... செடி காய்கறிகள், பந்தல் காய்கறிகள், குறைந்த பராமரிப்பு அதிக விளைச்சல் எடுக்கும் நுட்பங்கள் ஆகியவை இடம்பெறும். இப் பயிற்சிக்கு முன் பதிவு அவசியம் பயிற்சி கட்டணம் ரூ.200 ஆகும். பயிற்சியில் கலந்துக்கொள்ள 8300093777, 9442590077 எண்ணை அழைக்கவும்.
7.புராதன சின்னங்களில் ஜி20 லேசர் லைட் ஒளி
ஜி 20 நாடுகள் அடங்கிய கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா அதிகார்ப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதை கொண்டாடும் வகையில், மாமல்லப்புரத்தில் உள்ள புராதன சின்னங்களில் ஜி20 லேசர் லைட் ஒளிரூட்டப்பட்டு மின்னுகிறது. மேலும், நாடு முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட புராதன சின்னங்களுக்கு மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. டெல்லியில் செங்கோட்டை, ஹுமாயுன், சப்தர்ஜங் கல்லறைகளில் ஜி 20 அமைப்பின் பிரேத்யேக சின்னத்துடன் மின்னோளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு வாரத்திற்கு நீடிக்கும்.
8.இந்தியத் தூதர் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து, நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை, கூகுள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு சான் பிரான்சிஸ்கோவில் வழங்கினார்.
ட்விட்டரில், சந்து, "சான் பிரான்சிஸ்கோவில் உள்ள @Google& Alphabet @sundarpichai-க்கு பத்ம பூஷண் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். #மதுரையில் இருந்து Mountain View வரை சுந்தரின் உத்வேகப் பயணம், இந்தியா-அமெரிக்கா பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப உறவுகளை வலுப்படுத்தி, உலகளவில் இந்திய திறமைகளின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
9.டாக்டர். ஆர்.எஸ்.குரீல் கே.ஜே.சௌபால் வருகை
மகாத்மா காந்தி தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர். ஆர்.எஸ்.குரீல் கே.ஜே.சௌபாலை பார்வையிட்டார். இளம் ஊடக உறுப்பினர்கள் குழுவில் உரையாற்றும் போது அவர் செங்குத்து விவசாயம் மற்றும் விவசாயத்தில் வலையமைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கிரிஷி ஜாக்ரன் ஆற்றிய பங்கைப் பாராட்டிய அவர், கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு தகவல்களைச் சென்றடைய உதவும் வேளாண் ஊடகங்களின் பங்கு பற்றிப் பேசினார். எதிர்காலத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்ற முயற்சிப்போம் என்று நினைக்கிறேன். இந்தியாவிலும் உலக அளவிலும் தொழில்துறையில் பணியாற்றுவது குறித்தும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்தினார். நாட்டில் விவசாயத் தொழிலின் தற்போதைய சூழ்நிலையைப் பற்றி விவாதிக்க KJ சௌபல் அடிக்கடி இவ்வாறான நிகழ்வை ஏற்பாடு செய்கிறது என்பது குறிப்பிடதக்கது.
10.வானிலை தகவல்
இன்று மற்றும் நாளை, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை, டிசம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
PMFBY சம்பா நெல் காப்பீடு செய்ய காலக்கெடு| பல பகுதிகளில் மின் தடை| அதாரை புதுப்பித்துக் கொள்ள முகாம்
PM Kisan Update| ரூ.266 மானிய விலையில் யூரியா| ஆதார் மின் இணைப்பு பணிக்கு புதிய நடைமுறை அறிமுகம்
Share your comments