வட கிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று தருவதற்காக, சுமார் 40,000 இடங்களில் பயிர் அறுவடை ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
7 லட்சம் ஏக்கர் சேதம் (7 lakh acres damaged)
தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை மற்றும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான புயல்கள் காரணமாகப் பெய்த, கன மழை போன்றவற்றால், சுமார் 7 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்தன. இயற்கையின் இந்த கோரத்தாண்டவம் விவசாயிகளை நிலைகுலைய வைத்தது.
ரூ.600 கோடி ஒதுக்கீடு (An allocation of Rs.600 crore)
எனவே அவர்களின் நிலையை உணர்ந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, ரூ.600 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி வய்த மழையால், 16.3 ஏக்கர் லட்சம் பயிர்கள் சேதம் அடைந்தன.
உரிய நேரத்தில் காப்பீடு (Timely insurance)
வேளாண்துறை வழங்கிய அறிவுறுத்தலின்படி, சாகுபடி நேரத்தில், விவசாயிகள், பயிர் காப்பீடு செய்திருந்தனர்.தற்போது அதன் வாயிலாகவும், பயிர் பாதித்த விவசாயிகளுக்கு, இழப்பீடு கிடைப்பது உறுதியாகி உள்ளது.
40,000 இடங்களில் ஆய்வு (Study at 40,000 locations)
இதற்காக, மாநிலம் முழுவதும் சுமார் 40,000 இடங்களில், பயிர் அறுவடை ஆய்வுகள் மேற் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு கிராமத்திலும், அறுவடை நடைபெறும் நான்கு இடங்களில் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், பயிர் சேதம் மதிப்பீடு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது. இதற்காக, தற்போது வரை, 20,000 இடங்களில், அறுவடை ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன.
ஆய்வுப் பணிகள் (Research assignments)
வேளாண்மை , வருவாய், புள்ளியியல் உள்ளிட்ட துறைகளுடன், இரண்டு காப்பீட்டு நிறுவனங்களும் இணைந்து, இந்த அறுவடை ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
முன்கூட்டியே இழப்பீடு (Compensation in advance)
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம், அறுவடை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஜூலை மாதம் இழப்பீடு வழங்கப்படும்.வேளாண் துறை எடுத்து வரும் இந்த முயற்சிகளால் முன்கூட்டியே, அறுவடை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஏப்ரல் மாதம், விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பது உறுதியாகிவிட்டது.
மேலும் படிக்க...
நெல் அறுவடை இயந்திர வாடகை உயர்வு - சிக்கலில் விவசாயிகள்!
PM Kisan திட்டத்தில் விதிகள் மாற்றம் - விண்ணப்பதாரரின் பெயரில் நிலம் இருக்க வேண்டியது கட்டாயம்!
விவசாயத்திற்கு இலவச நீர் பாசன கருவிகள்- வேளாண் துறை அழைப்பு!
Share your comments