Agri exhibition
ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதில் விவசாயப் பொருட்கள் அனைத்தும் கண்காட்சிக்கு வைக்கப்படும். குறிப்பாக அதன் நன்மைகள் மற்றும் அரியவகை விவசாய விதைகள், தானியங்கள் என பல்வேறு பொருட்களும் இடம்பெறும். மேலும், நவீன விவசாயக் கருவிகள், விவசாயத்திற்கு உதவும் கருவிகளும் இடம்பெறும். அதனால் விவசாயிகள் எளிமையான முறையில் நல்ல பயிர் சாகுபடி செய்யவும் இக்கண்காட்சி பயனுள்ளதாக அமையும்.
விவசாய கண்காட்சி (Agri Exhibition)
ஒருங்கிணைந்த விவசாயிகள் நல சங்கம் சார்பில் திருச்சியில் முதல் முறையாக பிரமாண்டமான விவசாய கண்காட்சி திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் தொடங்கியது.
டிசம்பர் 16,17,18 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விவசாய கண்காட்சியில் 80 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வரும் விற்பனையாளர்கள் கொண்டு விவசாயம் சார்ந்த பொருட்கள் கட்சி படுத்தப்பட உள்ளது.
விவசாய கண்காட்சியில் அனைவருக்கும் இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள், மீன் வளர்ப்பு தொழில் நுட்பவியல் இயற்கை விவசாயம், தாவரங்கள் பாதுகாப்பு, கோழி பண்ணை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விவசாய கண்காட்சியில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த உபகரணங்களை அதன் பயன் மற்றும் செய்முறைகளை கேட்டு அறிந்து வாங்கி சென்றனர். இங்கு வரும் விவசாயிகள் இந்த கண்காட்சி பெரிதும் பயனுள்ளதாக இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க
சிறந்த விவசாய செய்தி தளம் 2022 விருதை வென்றது க்ரிஷி ஜாக்ரன்: எம்சி டொமிமினிக் பெருமிதம்!
பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்த வேளாண் துறை: விவசாயிகளுக்கும் கட்டுப்பாடு!
Share your comments