1. விவசாய தகவல்கள்

வீட்டுத்தோட்டம் மூலமே ஆரோக்கியமான எதிர்காலம் பிறக்கும்! - வேளாண் விஞ்ஞானி அறிவுறுத்தல்

Daisy Rose Mary
Daisy Rose Mary

இரசாயன நஞ்சு இல்லாத காய்கறிகளை உற்பத்தி செய்ய வீடுகளில் தோட்டம் அமைத்தால் மட்டுமே முடியும் என வேளாண் விஞ்ஞானி அறிவுறுத்தி உள்ளார். வீட்டு தோட்டம் மூலம் ஆரோக்கியமான காய்கறிகளை பெறும் போது, நல்ல ஆரோக்கியமான எதிர்காலம் பிறக்கும்.

ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்டம் குறித்த செயல்விளக்க பயிற்சி இணையவழியாக நடைபெற்றது. நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார். திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான சாந்தி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

வேளாண் விஞ்ஞானிகள் அப்போது பேசுகையில், சத்து பற்றாக்குறை என்ற நோய் உள்ளது. அந்த நோயை போக்க, ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்டங்களை வீடுகளில் அமைக்க வேண்டும். உணவு உற்பத்தி குறைவாக இருந்ததால் தான் பசுமை புரட்சி வந்தது. சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்து கொள்ளாததால் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளின் சத்து குறைந்துவிடுகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு

சத்து குறைபாடு காரணமாக தோல்கள் சுருங்கி சிறு குழந்தைகள் வயதானவர்களை போல தெரிவார்கள். தண்ணீர் குடிக்கும் போது கைவிரல்கள் நீரில் படக்கூடாது. வீடு சிறிய இடத்தில் இருந்தாலும் நிலையான சத்துணவு தரும் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும். அப்போது தான் நஞ்சு இல்லாத காய்கறிகளை உற்பத்தி செய்து உண்ண முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் அனுராதா, ராதாகிரருஷ்ணன், ஜெகதீசன், செல்வமுருகன், சபாபதி, உதவி பேராசிரியர்கள் புனிதா, கமலசுந்தரி மற்றும் திருவள்ளூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க....

மண் வளத்தை பெருக்க கோடை உழவு செய்யுங்கள்! - வேளாண் துறை அறிவுரை!!

தக்காளி சாகுபடியில் பயிர் பாதுகாப்பு - தோட்டக்கலை துறை ஆலோசனை!!

உழவா் சந்தைகளை திறக்க அனுமதி அளிக்க கோரி விவசாயிகள் மனு!!

English Summary: Agricultural Scientist Instruct that healthy future is can brought through home gardening! Published on: 30 June 2021, 07:51 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.