1. விவசாய தகவல்கள்

வேளாண் அப்டேட்: தரமான விதை உற்பத்தி செய்ய பயிற்சி

Deiva Bindhiya
Deiva Bindhiya
Agriculture Update: Training for Quality Seed Production

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 2022-23 ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களை இலாபகரமான தொழிலாக மேற்கொள்ள வேளாண் தொழில்நுட்பங்களில் வேளாண் இளஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

வேளாண்மையே நாட்டின் முதன்மையான வளமாகும். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வேளாண் வளர்ச்சிக்கு தரமான விதைகளே அடிப்படையாக அமைகிறது. நம் நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற பசுமைப்புரட்சி மூலம் உயர் விளைச்சல் தரக்கூடிய பயிர் இரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நல்ல விதை உற்பத்தி விவசாயிகளஉக்கு கொண்டு சேர்ப்பதாகும்.

விதை உற்பத்தி வணிகத்தில் ஈடுபட உள்ள வேளாண் தொழில் முனைவோர் காலத்தின் தேவையை அறிந்து பயிர் ரகம் ஃ வீரிய ஒட்டு ரகத்தினா தேர்வு செய்து சாகுபடி செய்தல், விதை சுத்திகரிப்பில் தரம் பிரித்தல் ஆகியவற்றின் மூலம் தரமான விதை உற்பத்தியாளர் ஆகலாம். எனவே, தரமான விதைகளை உற்பத்தி செய்ய புதிய தொழில் நுட்பங்கள், வழிமுறைகள் ஆகியவற்றில் பயிற்சி அளித்து அதன் மூலம் சிறந்த தொழில்முனைவோராக மாறுவதற்கு வழிவகுக்க முடியும். இதனை கருத்தில் கொண்டு வேளாண் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி "தரமான விதை உற்பத்தியாளர்" என்ற தலைப்பில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலக கூட்ட மன்றத்தில் 30 நாட்கள் நடத்தப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள மகளிர், ஆதரவற்ற விதவைகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள 18 முதல் 40 வயதுடைய இளைஞர்கள், பெண்கள் தங்களது விண்ணப்ப படிவம், பாஸ்போர்ட் அளவு புகைப்பட நகல் 2, ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், குறைந்தபட்ச கல்வி தகுதியான எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சிக்கான கல்வி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் வரும் 15.11.2022 ஆம் தேதிக்குள், அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலோ, கரூர் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலோ பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர், கரூர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

கால்நடை மருத்துவர் செயலிப் பற்றிய கூடுதல் தகவல் இதோ!

100% மானியத்தில் விவசாயிகளுக்கு பாசன கருவிகள் வழங்கல்!

English Summary: Agriculture Update: Training for Quality Seed Production Published on: 02 November 2022, 03:32 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.