தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டிசம்பர் 31, 2022 தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இராமேசுவரம் - அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில், திருவண்ணமாலை-அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்,
மதுரை - அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைக் காணோலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்த சமய அறநிலைத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சுந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
2.ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் குறைந்த வட்டியில் கடன் உதவி
விவசாய பெருமக்களுக்காக, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பாக பொருளீட்டு கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 5 சதவீதம் வட்டி அதிகபட்சம் 3 லட்சம் வரை கடனும், வியாபாரிகளுக்கு 9 சதவீதம் அதிகபட்சம் 2 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. தொடர்புக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் விற்பனைக்குழு செயலாளர் அணுகவும். குறைந்த வட்டியில் பொருளீட்டு கடன் பெறுவீர், பயனடைவீர் என வேளாண் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
3.TNAU: Commercial production of fruit and vegetable products என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி
பழம் மற்றும் காய்கறிப் பொருட்களின் வணிகரீதியான உற்பத்தி” என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் பயிற்சியானது 04 ஜனவரி 2023 மற்றும் 05 ஜனவரி 2023 அன்று காலை 9.30 மணி முதல் 05 மணி வரை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள அறுவடைப் பின் தொழில்நுட்ப மையத்தில் நடைபெறும். இப்பயிற்சியில்,
- Dehydrated காய்கறிகள் மற்றும் பழங்கள்
- மிக்ஸ் பழ ஜாம்
- ஸ்குவாஷ்
- பானங்கள்
- ஊறுகாய்
- மிட்டாய்
- பழ டோஃபி
தயாரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்படும். ஆர்வமுள்ள நபர்கள் ரூ. ஆயிரத்து எழுநூற்று எழுபது மட்டும்) பயிற்சியின் முதல் நாள் நேரில் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க: TNAU: பழங்கள் மற்றும் காய்கறிகளின் வணிகரீதியான உற்பத்தி குறித்து பயிற்சி
4.மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி குறித்து ஆய்வுக் கூட்டம்
டிசம்பர் 31, 2022 சென்னை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அவர்கள் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி குறித்து அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிராமானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ரஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் திரு.ரா. மணிவண்ணன், அனைத்து இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள், இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி வருகிற 31 ஜனவரி 2023 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக வழங்க அரசு உத்தரவு பிரப்பித்துள்ளது
கடந்த அக்டோபர் 10,2022 முதல் டிசம்பர் 4,2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழையினால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகள் 3 நவம்பர் 2022 மற்றும் 11 நவம்பர் 2022 ஆகிய தினங்களில் பெய்த மிக பலத்த மழையினால் பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர்சேத விவரங்களின் அடிப்படையில், மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 40, 031 விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கிடவும், மேலும், கடலூர் திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் சுமார் 8562 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் உத்தரவிடப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
6.புத்தாண்டில் வணிக சிலிண்டர் விலை உயர்வு: கலக்கத்தில் பொதுமக்கள்!
2023 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே வணிக கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை ஏற்றதால் சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.1917க்கு விற்பனையாகிறது. அதே சமயம் மும்பையில் ரூ. 1721க்கும், கொல்கத்தாவில் ரூ.1870க்கும் வணிக சிலிண்டர் விற்பனையாகிறது. இருப்பினும் ஆண்டின் முதல் நாளே இந்த விலை ஏற்றம் நாளடைவில் வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துமோ என்று பொதுமக்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
7.சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023- நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கியது
சர்வதேச தினை ஆண்டு (IYOM) 2023 மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் இந்திய தூதரகங்களால் மேற்கொள்ளப்படும் மையப்படுத்தப்பட்ட செயல்பாடுகளுடன் ஆரம்பமாகிறது. பிரதமரின் பரிந்துரையை ஏற்று, 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நாடுகள் சபை அறிவித்தது. இதன் அடிப்படையில் 2023ம் ஆண்டில் இந்தியாவை சிறுதானியங்களின் சர்வதேச மையமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு கண்ணோட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் விளைந்த முதல் தானியம் சிறுதானிம்தான் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. உலகம் முழுவதும் 130 நாடுகளில் சிறுதானியங்கள் விளைவிக்கப்பட்ட போதிலும், இதுவே ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் 50 கோடிக்கும் மேற்பட்டோரின் பாரம்பரிய உணவாக இருந்தது குறிப்பிடதக்கது.
8.கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றுவதற்கான யோசனைகள், தீர்வுகள் மற்றும் செயல்களை அழைக்கும் பிரஜ்வாலா சவாலை அறிமுகம்
கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றுவதற்கான யோசனைகள், தீர்வுகள் மற்றும் செயல்களை அழைக்கும் பிரஜ்வாலா சவாலை அறிமுகப்படுத்துகிறது. விண்ணப்பங்கள் 29 டிசம்பர் 2022 முதல் ஜனவரி 31, 2023 வரை வரவேற்கப்படுகின்றன. கிராமப்புறப் பொருளாதாரத்தை மாற்றும் யோசனைகள், தீர்வுகள் மற்றும் செயல்களை அழைக்கும் நோக்கத்துடன், தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (DAY-NRLM) பிரஜ்ஜ்வாலா சவாலை அறிமுகப்படுத்தியுள்ளது. தனிநபர்கள், சமூக நிறுவனங்கள், ஸ்டார்ட் அப், தனியார் துறை, சிவில் சமூகம், சமூக அடிப்படையிலான அமைப்பு, கல்வி நிறுவனம், ஸ்டார்ட்-அப்கள், இன்குபேஷன் சென்டர்கள், முதலீட்டாளர்கள் போன்றவற்றில் இருந்து கிராமப் பொருளாதாரத்தை மாற்றும் திறன் கொண்டவர்களிடமிருந்து யோசனைகள் அழைக்கப்படும் தளங்களில் இதுவும் ஒன்றாகும்.
9. தனுகா அக்ரிடெக் லிமிடெட் சந்தைப்படுத்தலுக்கு புதிய துணை பொது மேலாளர் நியமனம்
சுபோத் குப்தா தனுகா அக்ரிடெக் லிமிடெட் சந்தைப்படுத்தல் துணை பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பொறுப்பு குறித்து ட்வீட் செய்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
10. வானிலை தகவல்
இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மறஅறஉம் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக. வருகிற ஜனவரி 3 முதல் 5 வரை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
மேலும் படிக்க:
Breakfast Recipe: அசத்தலான இன்ஸ்டன்ட் ராகி தோசை
கொப்பரை தேங்காய்க்கு 2023 MSP| கரும்பு விவசாயிகள் போராட்டம்| Irrigation Farming
Share your comments