1. விவசாய தகவல்கள்

PMFBY: காரீஃப் பயிர்களுக்கான காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி தேதி!

Daisy Rose Mary
Daisy Rose Mary

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் (Pradhan Mantri Fasal Bima Yojana) கீழ் காரீஃப் பருவ பயிர்களுக்கான காப்பீட்டிற்கு அடுத்த மாதம் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் என்றால் என்ன ?

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய  பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பருவம் தவறி பெய்யும் மழை மற்றும் அதிகப்படியான மழையால் ஏற்படும் பயிர் இழப்பினை இந்த திட்டம் ஈடு செய்கிறது. வானிலை மாறுபாடு போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் சேதம் உள்ளட்ட சூழ்நிலைகளில் விவசாயிகளுக்கு உதவுவதற்காக கடந்த 2016 ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான காரீஃப் பருவப் பயிர்களை (Kharif Crops) அடுத்த மாதம் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

காப்பீடு முறை

  • இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்களது கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவர்.

  • காப்பீட்டு வசதியை பெற விரும்பாத கடன்பட்ட விவசாயிகள் கடைசி தேதிக்கு ஏழு நாட்களுக்கு முன்னர் தங்கள் கிளைக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

  • கடன்படாத விவசாயிகள் பயிர் காப்பீட்டை பொது சேவை மையங்கள், வங்கிகள், முகவர்கள் அல்லது காப்பீட்டு வலைதளங்கள் மூலமாக தாங்களாகவே செய்துக்கொள்ளலாம்

காப்பீடு பயன்கள்

இத்திட்டத்தின் மூலம் காப்பீடின் நன்மைகளைப் பெற விதை விதைத்த 10 நாட்களுக்குள் விவசாயிகள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

  • ஆலங்கட்டி மழை, தண்ணீர் தேக்கம், மேக வெடிப்பு, இயற்கை தீ விபத்து போன்றவற்றால் ஏற்படும் சேதங்களும் அடங்கும்.

  • இயற்கை பேரழிவு காரணமாக பயிர் சேதமடைந்திருந்தால் மட்டுமே காப்பீட்டின் நன்மை வழங்கப்படும்.

  • விதைப்பு மற்றும் அறுவடை காலத்திற்கு இடைப்பட்ட பருவத்தில் உள்ள பயிர்களுக்கு இயற்கை பேரழிவு, நோய்கள் மற்றும் பூச்சி தாக்குதல்கள் மற்றும் பிற உள்ளூர் பேரழிவுகளான புயல் காற்றுடன் கூடிய பெருமழை, நிலச்சரிவு, மேக வெடிப்பால் ஏற்படும் பெருமழை மற்றும் மின்னல் தாக்கியதால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றுக்கும் பிரதமரின் காப்பீட்டு திட்டத்தால் ஈடுசெய்யப்படுகிறது.

  • அறுவடைக்கு பிறகு அடுத்த 14 நாட்களுக்கு வயலில் உலர்த்துவதற்காக வைக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு பருவம் தவறிய புயல், பெருமழை, புயல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய சேதங்களுக்கும் காப்பீட்டு நிறுவனம் ஈடுசெய்யும்.

  • சாதகமற்ற பருவகால நிலமைகளால் நீங்கள் விதை விதைக்கவில்லை என்றாலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

Image credited by news leam

காப்பீட்டு தொகை

  • ஒருவர் காரீஃப் பயிர்களுக்கு 2 சதவிகித ப்ரீமியத்தையும், ராபி பயிர்களுக்கு 1.5 சதவிகித ப்ரீமியத்தையும் செலுத்த வேண்டும்.

  • பிரதமரின் இத்திட்டம் தோட்டகலை பயிர்கள் மற்றும் வணிக பயிர்களுக்கும் காப்பீட்டு பாதுகாப்பை வழங்குகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் 5 சதவிகித ப்ரீமியத்தை செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க...
Kharif crops: காரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைகள் நிர்ணயம்!!

விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?

PMJDY: ஜன்தன் கணக்கு தகவல்கள் அறிவது எப்படி?

விண்ணப்பிப்பது எப்படி?

  • விவசாயின் ஒரு புகைப்படம், எதாவது ஒரு அடையாள அட்டை, முகவரி சான்று, வயலில் பயிரின் புல மாதிரியின் காஸ்ரா எண் (khasra number) ஆகியவற்றை வழங்கவேண்டும்.

  • காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ள 18002005142 or 1800120909090 என்ற கட்டணமில்லா எண்ணில் அழைக்கலாம். அல்லது காப்பீட்டு நிறுவனம் மற்றும் வேளாண் துறை நிபுணரை காப்பீட்டு தொகையை கோர அழைக்கலாம்.

 

English Summary: Apply Before July 31st to Avail the Benefits on PMFBY for Kharif Crops Published on: 06 June 2020, 01:13 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.