தண்ணீர் தேவை மிகக் குறைவு. ஆண்டின் எல்லா பருவத்திலும் பழமும் காய்களும் விளைந்து தள்ளும். இதெல்லாம் எங்கே? 'ஸ்மார்ட் கிரீன்ஹவுஸ்' எனும் நவீன பசுமைக்குடில்களில் தான்.வேளாண்மையின் வருங்காலம் அதிதிறன் பசுமைக்குடில்கள் தான் என்பதில் விவசாய வல்லுநர்களுக்கு சந்தேகமில்லை. எனவேதான், ஆம்ஸ்டர்டாம் நகரில் இயங்கும், 'சோர்சஸ்' என்ற அமைப்பு, பசுமைக்குடில்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை நல்கும் சந்தா சேவையை தொடங்கியுள்ளது. இது உருவாக்கியுள்ள 'சைப்ரஸ்' என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள், ஒரு பசுமைக்குடில் நிர்வாகியும் பணியாளர்களும் தினமும் விளைச்சலைப் பெருக்கும் முடிவுகளை எடுக்க உதவுகிறது.
பசுமைக்குடில்கள் (Greenhouses)
வெளி நிலத்தில் செய்யப்படும் வேளாண்மை, காற்று மாசுபாட்டுக்கு வழிவகுக்கிறது. இதை குறைக்க, பசுமைக் குடில்களுக்குள், அலமாரி போல உயர மான பல அடுக்குகளில் பயிர்களை வளர்ப்பது நல்ல உத்தி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்துடன், பசுமைக்குடில்களுக்குள், காற்று, நீர், மண் மற்றும் செடிகள் ஆகியவற்றில் பலவித உணரிகளை பதிக்கலாம். பிறகு, அவை தரும் தரவுகள் வாயிலாக செயற்கை நுண்ணறிவு மென்பொருள் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
மேலும், எந்த தாவரத்திற்கு எந்த வகை சத்து தேவை, நீர் தேவை, வெயில் தேவை போன்றவற்றை கவனித்து, குடில் நிர்வாகிகளுக்கு துல்லியமான ஆலோசனைகளை சைப்ரஸ் மென்பொருள் வழங்குகிறது. தற்போது சிலவகை கீரைகளையே நவீன பசுமைக்குடில்கள் பயிரிடுகின்றன.
தற்போது நகரின் மையப்பகுதிகளில் உள்ள கட்டடங்களிலேயே பசுமைக்குடில்கள் அதிகம் தொடங்கப்படுவதால், பலவகை காய் கறிகள், பழங்களையும் பயிரிட முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு, சைப்ரஸ் போன்ற மென்பொருள்கள் உதவும்.
மேலும் படிக்க
இயற்கை வேளாண்மை விளைபொருள் ஏற்றுமதியில் சிறந்த விவசாயிகளுக்கு பரிசு!
Share your comments