ரசாயன விவசாயத்தில், எந்த நோய் தாக்குதலையும் பூச்சிக்கொல்லி மற்றும் உரத்தின் துணைகொண்டு துவம்சம் செய்யலாம். ஆனால், இயற்கை விவசாயத்தைப் பொருத்தவரை, பயிருக்கு நோய்த்தாக்குதலோ, பூச்சித்தாக்குதலோ இல்லாமல் பார்த்துக்கொள்வதுவதான் மிகவும் சவால் மிகுந்தது.
கூடுதல் கவனம் (Extra focus)
இந்த விஷயத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்தாவிட்டால், பயிர்கள் நாசமாவதுடன், நம்உழைப்பையும், காசையும் வீணாக்கிவிடும். இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்
திட்டமிடல் (Planning)
இயற்கை விவசாயத்தில் திட்டமிடல் என்பது மிக முக்கியமான ஒன்று . என்ன பயிர் செய்யப்போகிறோம். அது எத்தனை நாள் பயிர் (நாட்களை பொறுத்து பயோ பெஸ்டிசைடு தேவையான அளவு இருப்பு வைக்கலாம். பூச்சி நோய் எதிர்ப்பு ரகங்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அந்தப் பயிரில் எப்பொழுது பூச்சி , நோய் தாக்கும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
தேவையான பயோ பெஸ்டிசைடு (Bio-Pesticide)எங்கே கிடைக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு, குறைந்தது 4 மாத expiry உள்ள பயோ பெஸ்டிசைடு வாங்கி வைத்து கொள்ளலாம்.
2 வகை (2 type)
அத்தகைய பயோ-பெஸ்டிசைடு இரண்டு வகைப்படும்.
நுண்ணுயிரிகள் கொண்டுத் தயாரிக்கப்படுவது. அதாவது பாக்டீரியா போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுவது முதல்வகை.
பயோ கெமிக்கல் கொண்டு தயாரிக்கப்படுவது 2-வது வகை. அதாவது இயற்கையாக தாவரங்களில் உருவாகும் பொருளை கொண்டு தயாரிக்கப்படுவது. உதாரணமாக வேப்ப எண்ணெய் கரைசல் இந்த வகை இயற்கை பூச்சி விரட்டிகளை நாமே தயாரித்து கொள்ள முடியும்.
பயோ-பெஸ்டிசைடின் நன்மைகள் (Benefits of Bio-Pesticide)
-
செயற்கை விவசாயத்தை விட பயோ பெஸ்டிசைடு பயன்படுத்துவதால் விளைவுகள் மிக மிக குறைவாகத்தான் இருக்கும்.
-
பயோ பெஸ்டிசைடு தெளிப்பதால் நாம் எதன் மீது தெளிகிறோமோ அதன் மீதுதான் அதன் தாக்கம் இருக்கும்.
-
பூச்சி கொல்லிமாதிரி நிலம், பறைவைகள் , நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் விலங்குகள் பாதிக்கப்படாது.
-
உயிர் பூச்சி கொல்லிகள் குறைந்த அளவில் அதிகம் பலன் தரக்கூடியவை மற்றும் வேகமாகவும் மக்கிவிடும்.
1) வெர்டிசிலியம் லக்கானி ( Verticillium lecani)
-
அனைத்து வகையான சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம். ( aphids, jassids, mealybugs, white flies, mites )
-
இது பூச்சிகளின் உடம்பிற்குள் நுழைந்து முடக்கி 5 முதல் 7 நாட்களுக்குள் அழித்துவிடும்.
2) பெவேரியா பேசியானா (Beauveria bassiana)
காய்துளைப்பானை மற்றும் thrips போன்றவற்றைக் கட்டுப்படுத்தக்கூடியது . இது பூச்சிகளின் செரிமானப்பகுதியை தாக்கி 5 முதல் 7 நாட்களுக்குள் அழித்துவிடும்.
3) பெசிலியோமைசிஸ் (Paecilomyces lilacinus)
-
இது எல்லா வகையான நெமடோட்களையும் (nematodes) கட்டுப்படுத்தக்கூடியது.
-
இது செரிமான பகுதியை தாக்கி முடக்கி அழித்துவிடும்.
4) ட்ரைகோடெர்மா விரிடி மற்றும் ஹாசனியம் (Trichoderma viride and Harzianum)
இது உயிர் பூஞ்சானக் கொல்லியாகும். மண் சார்ந்த வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த கூடியது.
5) சூடோமோனஸ்
இதுவும் ஒரு பூஞ்சான கொல்லியாகும், பூஞ்சானக் கொல்லியாக மட்டுமல்லாமல் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும்.
6) பேசில்ஸ் துருஞ்சியன்சிஸ்
பெரிய வகை புழுக்களையும் கட்டுப்படுத்த வல்லது.
இந்த அனைத்து பயோ- பெஸ்டிசைடுகளும், இயற்கை விவசாயிகள் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க...
எலிகள் சாப்பிடாத பழம் எது? சாகுபடி செய்ய சூப்பர் 10 யோசனைகள்!
ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி?
கலப்பு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் என்ன ஆபத்து?
Share your comments