விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ. 50,000 மானியம், விவசாயப் பயிர்களுக்கு இழப்பீடு பெற காப்பீடு செய்யுங்கள்: வேளாண்மைத்துறை அழைப்பு, உர விற்பனையகங்களில் உரச் சிறப்பு பறக்கும் படை ஆய்வு, திருச்சியில் 150 கோடி ரூபாயில் பால் பவுடர் தொழிற்சாலை: அரசு திட்டம், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தில் உணவுப் பஞ்சம் வரும்: பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தினர் அறிவிப்பு, ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் GI Fair 2022 வேளாண் கண்காட்சி இன்றுடன் நிறைவு முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ. 50,000 மானியம்!
தமிழகத்தில் மானாவாரிப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்பட இருக்கிறது. எனவே, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வெளாணமை வளர்ச்சித் திட்டக் கிராமங்களான இருட்டணை, வில்லிபாளையம், பிள்ளைக்களத்தூர், நல்லூர் ஆகிய கிராமங்களில் மானாவாரிப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்பட உள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு உட்டுபயிர், கறவை மாடு, ஆடுகள், தேனிப் பெட்டிகள், தீவனப்புல் வளர்ப்பு முதலானவைகளுக்கு பின்னேற்பு மானியமாக ரூ. 50,000 வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடி இன விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
விவசாயப் பயிர்களுக்கு இழப்பீடு பெறக் காப்பீடு செய்யுங்கள்: வேளாண்மைத்துறை அழைப்பு
பி எம் ஃப்சல் பீமா யோஜனா திட்டத்தின்கீழ், பாதிக்கப்படும் விவசாயப் பயிர்களுக்கு இழப்பீடு பெறக் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண்மை த்துறை அழைப்பு விடுத்துள்ளது. புயல், வெள்ளம், வறட்சி, இடி, மின்னல் மற்றும் கன மழையினால் பாதிக்கப்படும் தென்னை, பனை மரம் மற்றும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற அனைத்து விவசாயிகளும் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, குட்டை மற்றும் ஒட்டு ரக தென்னை மரங்களுக்கு 4-ஆம் ஆண்டு முதலும், நெட்டை மரங்களுக்கு 7-ஆம் ஆண்டு முதலும் காப்பீடு செய்யலாம். குறிப்பாக, ஒரு ஹெக்டர் நிலத்துக்கு 175 தென்னை மரங்களை மட்டுமே காப்பீடு செய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
உர விற்பனையகங்களில் உரச் சிறப்பு பறக்கும் படை ஆய்வு
தஞ்சாவூர் மாவட்ட மதுக்கூர் வட்டாரத்தில் விவசாயத் தேவைக்காகப் பத்து தனியார் உரக்கடைகளுக்கும் பத்து கூட்டுறவு உர விற்பனை நிலையங்களுக்கும் உர விற்பனை உரிமம் வழங்கப்பட்டுத் தேவையான அளவு உரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து, மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள அனைத்துக் கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மற்றும் தோட்டக்கலை அலுவலர் கார்த்திகா ஆகியோர் அடங்கிய குழு உர விற்பனையில் மீறுதல்கள் இருக்கின்றனவா என்பதை குறித்து ஆய்வு செய்தது.
திருச்சியில் 150 கோடி ரூபாயில் பால் பவுடர் தொழிற்சாலை அமைப்பு
திருச்சியில் 150 கோடி ரூபாய் மதிப்பில் பால் பவுடர் தொழிற்சாலை அமைப்பதற்கான முன்னெடுப்பில் ஆவின் நிறுவனம் செயல்படுகிறது. ஆவின் நிறுவனத்திற்கு பால் பவுடர் தயாரிக்க, சிறிய அளவிலான தொழிற்சாலைகள் உள்ளன. பால் கொள்முதல் அதிகரித்து உற்பத்தி குறையும் போது, பால் பவுடர் தயாரிப்பினை அதிகரிக்க வேண்டிய சூழல் இருப்பதால், தனியார் நிறுவனங்களை நம்பி இருக்கக் கூடிய சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், திருச்சியில் தொழிற்சாலை அமைக்க நிறுவனம் முடிவெடுத்துள்ளது. கட்டுமான செலவிற்கு நபார்டு வங்கியிடம் கடனுதவி பெற்று அமைக்க உள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க
விமான நிலையத்துக்கு நிலம் கொடுத்தால் அரசு வேலை உறுதி!
”தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” : தொழில் திட்டங்கள் அறிவிப்பு
Share your comments