1. விவசாய தகவல்கள்

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

Credit : Moose

அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கிழக்கு திசைக் காற்றலைகளின் காரணமாக, இன்று முதல் வரும் 2ம் தேதி வரை தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)

3.02.2021 மற்றும் 4.02.21

  • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

  • அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை (Chennai)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும். காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to Fisherman)

பிப்ரவரி 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வட கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க - ரூ.6 லட்சம் மானியம்!

வேலி ஓரங்களில் எந்த மரக்கன்று நடலாம்?

பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க- ரூ.82,000 வரை மானியம்!

 

English Summary: Chance of rain in coastal districts - Weather Center Info!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.