1. விவசாய தகவல்கள்

எலிகளைக் கட்டுப்படுத்தும் இயற்கை மருந்து - தயாரிக்க சில டிப்ஸ்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit : Steemit

விளை நிலங்களில் புகுந்து, பயிரை நாசம் செய்யும் எலிகள், எப்போதுமே விவசாயிகளின் எதிரியாகவேத் திகழ்கின்றன. எனவே இந்த எதிரிகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதிலேயே விவசாயிகளின் பெரும்பாலான நேரம் வீணாகிறது. இதனைத் தடுக்க, சில எளிய வழிமுறைகள் மற்றும் எலிகளுக்கான சிறப்பு மருந்தைத் தயாரித்துப் பயன்படுத்துவதன் மூலம் எலிகளை துவம்சம் செய்ய முடியும்.

எலிகளின் இலக்கு (The target of the rats)

  • நொச்சி மற்றும் எருக்கம் செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை இருக்காது.

  • தங்க அரளிக் கிளைகளை வயல்சுற்றி போட்டால் எலிகள் வந்த வழி தெரியாமல் ஓடிவிடும்.

 எலிகளைக் கட்டுப்படுத்த (To Control Rats)

  • சணப்பு பூவை சிறிய துண்டுகளாக்கி, அதைப் பரவலாக அங்கு அங்கே வயலில் இட்டால், அதிலிருந்து கிளம்பு வாடையினால் எலிகள் ஓடி விடும்.

  • பனை ஓலைகளை அருகில் ஆந்தை உட்கார குச்சியில் கட்டி வைத்தால் அவை எழுப்பும் ஓசையால், எலிகள் எதிர்திசையில் ஓடிவிடும்.

  • எலி வலைக்கு அருகில் ஆந்தை உட்கார குச்சி வைத்தால் அது எலித் தொல்லையைக் குறைக்க உதவும்.

  • எலிகளின் எண்ணிக்கையை குறைக்க ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப்பின்பும், எலி வலைத்தோண்டி எலிகளை அழிக்கவேண்டியது அவசியம்.

  • எலிகளைக் கட்டுப்படுத்த, மூங்கில் கழிகளின் மீது வயர் சுற்றிப் பிடிக்க ஒரு பொறி செய்து பயன்படுத்தலாம்.

  • எலியை அழிக்க, ஒரு பெரிய வட்ட வடிவமான மண் பானையை வயலில் தரைமட்டத்திற்கு புதைக்கவேண்டும். அதில் பாதியளவு களிமண் சாந்தை நிரப்பிவிடவேண்டும்.

  • ஒரு தேங்காய் தொட்டியில் எலி உணவு வைத்து அதைப் பானையின் உள்ளே வைத்தால், எலியை கவரும், கவரப்பட்ட எலியானது மண் சாந்தில் விழுந்து மேல் எழ முடியாமல் இறந்துவிடும்.

  • ஊறவைத்த அரிசியை எலி கவரும் பொறியாக வைத்தால், நிறைய எலிகளைக் கவரும்.

    பசுஞ்சாணத்தை வயலிலும், வரப்பிலும் வைத்தால், எலித்தொல்லைக் குறையும்.

இயற்கை மருந்துகள் (Natural Medicine)

1. கடலை உருண்டை

செய்முறை

வறுத்து, பொடித்த வேர்கடலை – அரை கிலோ
எள்ளு வறுத்து, பொடித்தது)      – கால் கிலோ
வெல்லம்                                   – அரை கிலோ
நெய்                                         – சிறிதளவு.
சிமெண்ட்                                 – அரை கிலோ.

  • ஒரு பாத்திரத்தில் பொடித்த வேர்கடலை, எள்ளு, சிமெண்ட் போட்டு நன்கு கலந்த பின்னர் வெல்லத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.

  • கைகளில் தொடும்போது லேசான பிசுபிசுப்பு வந்த உடன், அப்பாகை கலவையில் சிறிது, சிறிதாக ஊற்றி குச்சியால் கிளறிவிடவும்.

  • பின்னர் சிறிது நெய்யை விட்டு நன்கு கலந்து பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

  • இந்த உருண்டைகளை வரப்பில் உள்ள எலிவளைகளில் போடும்போது, எலிகள் கடலையின் வாசனையால் சாப்பிடும்.

  • இவ்வுருண்டைகளில் உள்ள சிமெண்ட் வயிற்றில் சென்று இறுகி விடுவதால் எலிகள் இறந்து விடும்.

2. கருவாடு- சிமெண்ட் கலவை.

செய்முறை

  • கருவாட்டை தணலில் இட்டு சுட்டு பின் பொடித்து, அதனுடன் சமஅளவில் சிமெண்ட் கலக்கவும்.

  • இக்கலவையை எலி நடமாட்ட பகுதிகளில் சிறு சிறு குவியலாக வைத்து விடவும்.

  • எலிகள் கருவாட்டு வாடையால் ஈர்க்கப்பட்டு இக்கலவையை சாப்பிட்டுவிட்டு இறந்துவிடும்.

3. முட்டை கரைசல்.

செய்முறை 

  • அழுகிய அல்லது சாதாரண முட்டைகள் பத்தை 25 லிட்டர் டிரம்மில் போட்டு முக்கால் பங்கு தண்ணீர் பிடித்து மூடி வைத்து விடுங்கள்.

  • ஒரு வாரம் கழித்து இக்லவையை வரப்புகள் மற்றும் வேலி ஓரங்களில் ஊற்றி விடும்போது எலி, முயல், அணில் போன்றவைகள் நம் வயலுக்குள் வருவதை தவிர்த்து விடும்.

  • தொடர்ச்சியாக பாசனத்தில் ஜீவாமிர்தம் மற்றும் மீன்அமிலம் கலந்து விடும்போது, எலிகளின் நடமாட்டம் அறவே இல்லாமல் போகின்றது.

மேலும் படிக்க...

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க - ரூ.6 லட்சம் மானியம்!

வேலி ஓரங்களில் எந்த மரக்கன்று நடலாம்?

பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க- ரூ.82,000 வரை மானியம்!

English Summary: Natural Remedies For Mice - Some Tips To Make! Published on: 31 January 2021, 11:08 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.