தென்னை, உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் மக்களுக்கு வாழ்வாதார பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் மேம்பட்ட ஊட்டச்சத்து, வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை உருவாக்குவதில் தென்னையின் திறன் நன்கு அறியப்பட்டவை.
இந்தியாவில், தென்னை 18 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது மற்றும் பன்னிரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரத்திற்கு மூலதனமாக விளங்குகிறது. இந்தியாவில் தென்னை சாகுபடியில் 90% பங்கைக் கொண்டுள்ள கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு தென் மாநிலங்களின் விவசாய பொருளாதாரத்தில் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
நாட்டில் தென்னை சாகுபடி முக்கியமாக சிறு மற்றும் குறு விவசாயிகளின் கைகளில் உள்ளது, 90% க்கும் மேற்பட்ட தென்னை சாகுபடி நிலங்கள் 0.4 ஹெக்டேருக்கு குறைவான நிலத்தை கொண்டுள்ளது. கேரளா மற்றும் இந்தியாவில் தென்னையின் பரப்பளவு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் அட்டவணை 1 இல் கொடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், தென்னை உற்பத்தியில் மிகப்பெரிய பரப்பளவை (38.50%) ஆக்கிரமித்துள்ள போதிலும், தென்னை சாகுபடி செய்யும் சராசரி நில அளவு பெரும்பாலும் சிறியவை ஆகும். இது ஆண்டு முழுவதும் குடும்பத்திற்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குவதில்லை மற்றும் குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான வருமானத்தை ஈட்டுவதில்லை.
அதிக அளவு விலை ஏற்ற இறக்கங்களால் தென்னை விவசாயிகளும் பொருளாதார நெருக்கடி மற்றும் இதர பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இந்தியாவில் தேங்காயின் உள்நாட்டு விலை அடிக்கடி அதிகரிப்பதும் மற்றும் குறைந்து வருவதும் பெரும் சவாலாக உள்ளது.
தென்னை மரத்தின் இலை வடிவமைப்பு மற்றும் தனித்துவமான தாவரக் கட்டமைப்பானது, மரங்களுக்கிடையில் பயன்படுத்தப்படாத பகுதியின் பெரும்பகுதியை (75%) வருடாந்திர மற்றும் குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்வதற்கு பயன்படுத்த போதுமான வாய்ப்பை வழங்குகிறது.
வெப்பமண்டல கிழங்கு பயிர்களான, மரவள்ளி, சேனைக்கிழங்கு மற்றும் வெற்றிலை வள்ளி, ஆகியவை நல்ல உற்பத்தி திறன், சமையல் தரம், சுவை, மருத்துவ மற்றும் ஊட்டச்சத்துகளைக் கொண்ட மாவுச்சத்து காய்கறிகளாகும். எனவே கேரள மக்களின் உணவுகளில் பாரம்பரிய உணவாக பயன்படுகிறது. பீட்டா-கரோட்டின், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உணவு நார்ச்சத்து மற்றும் தாதுக்களின் மூலாதாரமாக விளங்குகிறது. உலகளவில் கிழங்கு பயிர்கள் 6% உணவு சக்தியை வழங்குகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அவை அதிக உயிரியல் செயல்திறனைக் கொண்டுள்ளன, வறட்சியை மற்றும் நிழலை பொறுத்துக்கொள்ளக்கூடியவை, வெள்ளம் மற்றும் உப்புத்தன்மையை ஓரளவிற்கு தாங்கக்கூடியவை, குறைந்த இடுபொருட்கள் பயன்பாடு மற்றும் பாதகமான மண் மற்றும் காலநிலை நிலைகளுக்கு ஏற்றவை. எனவே இந்த பயிர்கள் ‘காலநிலை மாற்றத்தை தாங்கி வளரக்கூடிய பயிர்கள்’ அல்லது ‘எதிர்கால பயிர்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
தென்னையின் இடைவெளிகளில் வெப்பமண்டல கிழங்கு பயிர்களை சாகுபடி செய்வது விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதோடு, வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. தென்னந் தோட்டங்களில் கிழங்கு பயிர்களின் சாகுபடித் தொழில்நுட்பங்களை ஐ.சி.ஏ.ஆர்-சி.டி.சி.ஆர்.ஐ ஆவணப்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட பயிர் முறைகள் குறித்த சோதனைகளில் கிழங்கு பயிர்கள் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 10-12 டன் கூடுதல் விளைச்சல், ரூ. 1.0-1.25 லட்சம் கூடுதல் வருமானம் மற்றும் 150-200 மனித நாட்கள் கூடுதல் வேலைவாய்ப்பு ஆகியவை வழங்கக்கூடியது.
ஐ.சி.ஏ.ஆர் ஆராய்ச்சி நிலையங்கள், கிழங்கு பயிர்கள் சார்ந்த அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின் (ஏ.ஐ.சி.ஆர்.பி டி.சி) கீழ் உள்ள ஐ.சி.ஏ.ஆர் நிலையங்கள், மாநில வேளாண் மற்றும் தோட்டக்கலை பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நிலையங்கள் கிழங்கு பயிர்களை அடிப்படையாகக் கொண்ட பயிர் முறைகளில் உற்பத்தி மற்றும் பண்ணை வருமானத்தை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றன.
உலகின் வெப்பமண்டல கிழங்கு பயிர்களுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட முதன்மையான ஆராய்ச்சி நிலையமான ஐ. சி. ஏ. ஆர்- மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலையம், விவசாயிகள் மற்றும் பிற பங்குதாரர்களிடையே தொழில்நுட்பங்களை பிரபலப்படுத்துவதற்கான பயிர் முறைகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் கள சோதனைகள் மற்றும் செயல் விளக்கங்கங்களில் முன்னோடியாக உள்ளது.
தென்னை அடிப்படையிலான கிழங்கு பயிர்கள் சம்பந்தப்பட்ட பயிர் முறைகள் ஒரு யூனிட் பகுதிக்கு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் இயற்கை வளங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலம் பொருளாதார வருவாயை அதிகரிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பயிர் முறையைப் பின்பற்றவும் மற்றும் விவசாயிகளுக்கு சமூக-பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளின் மேல் நம்பகத் தன்மையை அதிகரிக்கவும் செய்ய வேண்டும்.
பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, தென்னை விவசாயிகள் பயிர் முறை தொழில்நுட்பத்தை போதிய அளவில் கடைபிடிக்க முடியவில்லை. உழவர் தோட்டங்களில் பங்கேற்பு செயல் விளக்க திட்டங்களை நிறுவுவது பயிர் முறையைப் பின்பற்றி பலரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஊக்குவிக்கும். திருவனந்தபுரம் மாவட்டத்தில் தென்னையின் பரப்பளவு (68110 ஹெக்டேர்), உற்பத்தி (562 மில்லியன் தேங்காய்கள்) மற்றும் உற்பத்தித்திறன் (8251 தேங்காய்கள்/ஹெக்டேர்) அகும்.
இதைக் கருத்தில் கொண்டு, தென்னை மேம்பாட்டு வாரியம் (தெ. மே. வா), வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகம், கொச்சி, நிதியுதவியுடன் தென்னை அடிப்படையிலான கிழங்கு பயிர்கள் சம்பந்தப்பட்ட பயிர் முறைகள் குறித்த பத்து செயல் விளக்கத் திட்டங்கள் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் இலாபத்தை அதிகரிப்பதற்கு உருவாக்கப்பட்டன.
மேலும் படிக்க
தேங்காய் கொப்பரைகளை விற்பனை செய்ய அழைப்பு!
தேங்காய் விலை சரிய வாய்ப்பு- கையிருப்பு வைக்க வேளாண்துறை அறிவுறுத்தல்!
தென்னை மரங்களை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்: வேளாண் அதிகாரி விளக்கம்
Share your comments