பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், தென்சாகுபடி தொழில்நுட்பத் தொலைதூரப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
தென்னை சாகுபடி (Coconut cultivation)
திருப்பூர் மாவட்டத்தில் தென்னை மிக முக்கியமான பயிராகும். இதில் தரமான தென்னங்கன்று உற்பத்தி செய்வது, தென்னந்தோப்புகளைப் பராமரிப்பது, பூச்சி நோய்க் கட்டுப்பாடு மற்றும் தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது ஆகிய அனைத்து தொழில்நுட்பங்களையும் விவசாயிகள் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
இதனைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தென்னை விவசாயிகளுக்காகத் தொலைதூரக்கல்வி மூலம் பல சாகுபடி தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது.
31 இளம் விவசாயிகள் (31 young farmers)
தென் சாகுபடி தொழில்நுட்பம் சார்ந்த சான்றிதழ் படிப்பு தொலைதுரக் கல்வி இயக்ககம் மூலம் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆறு மாதகால சான்றிதழ் படிப்பில் 31 இளம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
துணைவேந்தர் அறிவுரை (Vice Vice Chancellor's advice)
தொடக்க விழாவில் பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் என். குமார், அனுபவம் வாய்ந்த விவசாயிகளும், தொழில்நுட்பம் அறிந்த விஞ்ஞானிகளும் இணைந்து செயல்பட்டால், வேளாண் உற்பத்தியைப் பல மடங்கு பெருக்க முடியும்.
எனவே இந்த தென்னை வளர்ப்பு தொழில்நுட்பக் கல்வியின் மூலம் தரமான கன்று உற்பத்தி செய்வது முதல் மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது வரையிலான தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள முடியும் எனக் கூறினார்.
தெலைதூரக்கல்வி இயக்ககத்தின் இயக்குனர் முனைவர். மு.அனந்தன் தனது உரையில், தொழில்நுட்ப படிப்பில் கலந்துகொண்ட விவசாயிகள் மாணவர்களாக மாறி தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க...
மானியம் பெற்று தருவதாக விவசாயிகளிடம் மோசடி!
Share your comments