1. விவசாய தகவல்கள்

விவசாயிகளுக்கு வட்டியில்லா வேளாண் கடன் ! விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Interest free agricultural loan for farmers soon! Details inside!

இந்த நிதியாண்டில் விவசாயிகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரை, வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என்று மகாராஷ்டிர அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் அறிவிப்பு (Announcement in the budget)

2021-22ம் ஆண்டுக்கான மகாராஷ்டிர அரசின் நிதிநிலை அறிக்கை அந்த மாநில சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அஜித் பவாரால் தாக்கல் செய்யப்பட்டது. இதில், விவசாயிகளுக்குக் கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிரடித் திட்டங்கள் (Action plans)

கொரோனா நெருக்கடி காலத்தில், மாநிலத்தின் வளர்ச்சிக்கு துணை நின்றத் துறை என்பதால், அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வட்டியில்லாக் கடன் (Interest free loan)

நடப்பு நிதியாண்டு முதல் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.

33% சலுகை (Interest free loan)

விவசாயிகள் கட்டவேண்டிய மின்சாரக் கட்டணத்தில் 33 சதவீதம் தள்ளுபடி(Discount)வழங்கப்படும். இதற்காக நிலுவையில் உள்ள 33 கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது.

வேளாண் நிறுவனங்கள் (Agricultural companies)

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய உதவும் வேளாண் உற்பத்தி நிறுவனங்கள்(Agricultural Produce Market Committee)தரம் உயர்த்தப்படும்.
பெரும்பாலான வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதால், அவற்றை மேம்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மின்சாரம் (Electricity)

விவசாய மோட்டர் வசதி உள்ள விவசாயிகளுக்கு விரைவில் மின்சார இணைப்பு வழங்கப்படும்.

ரூ.50,000 பரிசு(Prize of Rs. 50,000)

கடந்த 3 நிதியாண்டுகளில், வாங்கியக் கடனை அளிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் செலுத்திய விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை பரிசு வழங்கப்படும்.

ரூ.2 லட்சம் பரிசு (Rs 2 lakh prize)

பயிர்க்கடனை ஒரே தவணையில் செலுத்தும் விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் சலுகை அளிக்கப்படும்.

ரூ.1000 கோடி ஒதுக்கீடு 

சிறு பழம் மற்றும் காய்கறி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.1000 கோடி செலவில் வேளாண் உற்பத்தி நிறுவனங்கள்(Agricultural Produce Market Committee)அமைக்கப்படும். இந்த நிறுவனங்கள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக இலக்கு நிர்ணயித்து அடுத்த 6 ஆண்டுகள் செயல்படும்.

ஆராய்ச்சிக்கு ரூ.600கோடி (Rs 600 crore for research)

வேளாண் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அரசின் இந்த அறிவிப்புகள் மகாராஷ்டிர விவசாயிகளின் வயிற்றில் பால் வார்ப்பது போல் அமைந்துள்ளது.

எதிர்பார்ப்பு (Anticipation)

அதேநேரத்தில், இது போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துமா என்பதே நம் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க...

மானியம் பெற்று தருவதாக விவசாயிகளிடம் மோசடி!

கோடையில் நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்ய பதநீர் குடியுங்கள்!

மார்ச் 26-இல் மீண்டும் பாரத் பந்த்! விவசாயிகளுக்கு அழைப்பு

English Summary: Interest free agricultural loan for farmers soon! Details inside!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.