1. விவசாய தகவல்கள்

நானோ மீன் இயற்கை உரம் தயாரித்து தென்னை விவசாயி அசத்தல்!

R. Balakrishnan
R. Balakrishnan
Nano Fish Natural Fertilizer

இராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரையைச் சேர்ந்த விவசாயி சாகுல் ஹமீது, நெல்சாகுபடியில் மகசூலை அதிகரிக்க, நானோ மீன் இயற்கை உரத்தை தயாரித்துள்ளார். இதனை நடப்பாண்டில் சோதனை அடிப்படையில் நெற்பயிருக்கு பயன்படுத்த உள்ளனர். திருப்புல்லாணி அருகே சேதுக்கரை மிஸ்வாக் நகரை சேர்ந்தவர் தென்னை விவசாயி சாகுல் ஹமீது 75. இவருக்கு தென்னந்தோப்புகள் உள்ளன.

நானோ மீன் உரம் (Nano Fish Fertilizer)

எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நானோ மீன் உரத்தை பயன்படுத்தி தென்னை மரத்தில் அதிக அளவு மகசூலை ஈட்டி வருகிறார். அதே தொழில்நுட்பத்தை நடப்பாண்டில் நெல் சாகுபடிக்கு பயன்படுத்தியுள்ளார். பிற நெற்பயிர்களை விட நானோ மீன் உரமிட்ட பயிர்கள் நன்கு செழித்து வளர்கின்றன.

இது குறித்து சாகுல் ஹமீது கூறியதாவது:

சங்காயம் எனப்படும் சூடை, முரல், காரா உள்ளிட்ட சிறிய மீன்களின் தொகுப்புகளே நானோ மீன் உரமாகும். சிறிய வகை மீன்களை நன்கு அரைத்து உரமாக மாற்றுகிறேன். கண்மாய் பாசனம் மற்றும் மானாவாரி பாசனத்தில் நெல் வயலில் நீர் தேங்கி இருக்கும் பொழுது இவ்வகை நானோ மீன் உரம் பயன்படுகிறது.

ஒரு ஏக்கருக்கு 400 லி., 20 நாட்கள் நெற்பயிராக இருக்கும் பொழுது வேர் பகுதியில் கொட்டி வைக்கப்படும். 40வது நாள் பூச்சி விரட்டி எனப்படும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றின் கலவைகளை அரைத்து நானோ மீன் உரத்தில் வைக்கப்படும். இதனால் பூச்சித் தாக்குதல் இருக்காது. யூரியா, பாஸ்பேட் உள்ளிட்ட உரங்களின் தேவையும் இருக்காது. 60வது நாளில் 50லி., நீர் உரத்தில் ஸ்பிரே செய்ய வேண்டும். 110 நாட்களில் நன்றாக விளைச்சலுக்கு வந்து விடும். சம்பா, சோதி மட்டை, குறுவக்களஞ்சியம், ஐ.ஆர்.20 உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்களுக்கு இவை பயனுள்ளதாக இருக்கிறது.

நடப்பாண்டில் பரிச்சார்த்த முயற்சியாக திருப்புல்லாணி அருகே சக்கரக்கோட்டை பகுதியில் இரண்டு ஏக்கரில் விவசாயம் செய்துள்ளேன். அறுவடை செய்த பின்பு சாதாரணமாக விளைந்த நெல்லுக்கும், நானோ மீன் உரம் இடப்பட்ட நெல்லின் மணிகளுக்கும் வித்தியாசத்தை பார்க்கலாம். இதன் பயன்பாடு குறித்து வேளாண் விரிவாக்க மையங்களில் நடந்த கருத்தரங்கில் பேசியுள்ளேன், என்றார்.

நகரும் வீடு

சாகுல் ஹமீது 2014ல் அஸ்திவாரம் ஏதும் இல்லாத நகரும் வீடு கண்டுபிடித்து அதில் வசித்து வருகிறார், என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மா ஏற்றுமதி மண்டலம் அமைக்க கிருஷ்ணகிரி விவசாயிகள் கோரிக்கை!

சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டுப் பொருட்கள்: தேசிய விருது வாங்கிய விருதுநகர் விவசாயி!

English Summary: Coconut farmer is amazing by making nano fish natural fertilizer! Published on: 06 March 2023, 09:31 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.