தமிழக விவசாயிகளுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
புரட்டியெடுத்தப் புயல்கள் (Revolutionary storms)
கொரோனா நெருக்கடி ஒருபுறம், தமிழகத்தை விரட்டி விரட்டி புரட்டியெடுத்த புயல்கள் மறுபுறம் என இந்த முறை விவசாயிகள் எண்ணிலடங்கா இன்னல்களையும், பெரும் இழப்புகளையும் சந்தித்தனர்.
இதனைக் கருத்தில்கொண்டு, தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கிய 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.
பயிர்க்கடன் ரத்து ரசீது (Crop loan cancellation receipt)
இதனை தொடர்ந்து பயிர்க்கடன் ரத்து செய்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
மேலும் பயிர்க்கடன் ரத்து செய்ததற்கான ரசீது 10 அல்லது 15 நாட்களில் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
1100 சேவை (1100 Service)
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் உதவியை பெற 1100 சேவை எண் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.
அனைத்து குறைதீர்க்கும் அமைப்புகளும் முதல்வரின் 1100 உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்படும். 1100-ஐ தொடர்பு கொண்டு அளிக்கப்படும் குறைகளுக்கு உடனடியாக துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் காணொலி மூலம் கீழடி 7ம் கட்ட அகழாய்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழக தொல்லியல்துறை சார்பில் 6 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் 7ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய 4 இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு பணி நடக்க உள்ளது.
மேலும் படிக்க...
மா மரங்களைத் தாக்கும் கற்றாழைப்பூச்சி- பாதுகாக்க யோசனை!
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- 40,000 இடங்களில் ஆய்வு!
Share your comments