கர்நாடகம் மற்றும் கேரளாவில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலும், கேரள மாநிலம் வயநாடு உள்பட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
நிரம்பி வழியும் அணைகள் (Overflowing dams)
இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி அணை முற்றிலுமாக நிரம்பி உள்ளது.
உபரி நீர் வெளியேற்றம் (Excess water discharge)
கபினி அணைக்கும், கிருஷ்ணசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கபினி அணைக்கு வரும் உபரி நீர் அணையின் பாதுகாப்பு கருதி அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
36,533 கனஅடி (36,533 cubic feet)
இவ்இரு அணைகளில் இருந்தும் மொத்தம் 36,533 கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. அவ்வாறு காவிரியில் திறந்து விடப்பட்ட உபரிநீர் கடந்த 24ந் தேதி ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒகேனக்கலில் த நீர்வரத்து 35,000 கன அடிக்கும் மேல் அதிகரித்துள்ளது.
ஆர்ப்பரிக்கும் அருவிகள் (Arbor Falls)
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில் காவிரி கரையோரப் பகுதிகளான நாகர்கோவில், முதலைப் பண்ணை, ஆலம்பாடி, ஊட்டமலை, பிரதான மெயின் அருவி செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வாகன சோதனை (Vehicle testing)
மேலும் ஆலம்பாடி சோதனைச்சாவடி, மடம் சோதனை சாவடி வழியாக வெளியூரில் இருந்து சுற்றுலாவுக்கு வரும் வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
மேட்டூர் அணை (Mettur Dam)
ஒகேனக்கல் காவிரியில் இரு கரைகளையும் தொட்டபடி வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடிகள் ஆகும். தற்போதைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 77.43 அடியாக உயர்ந்துள்ளது.ம் நீர்வரத்து வினாடிக்கு 34,141 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 34.44 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டுள்ள உபரி நீர் காரணமாக, மேட்டூர் அணைக்குக் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து, 30,000 கனஅடிக்கும் மேல் அதிகரித்துள்ளது.
12,000 கனஅடி (12,000 cubic feet)
அணையில் இருந்து 12,000 கனஅடி வீதம், தண்ணீர் காவிரியில் டெல்டா பாசனத்திற்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்மட்டம் அதிகரிப்பு (Increase in water level)
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டுர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க...
ஜாதிக்காய், கிராம்பு, மிளகு பயிரிட ரூ.20,000 மானியம்!
கரும்புக்குச் சொட்டு நீர்ப் பாசனம் -ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் மானியம்!
Share your comments