ஆறு மாநில விவசாயிகள் அதாவது, சத்தீஸ்கர், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை ஒரே கிளிக்கில் க்ளைம் தொகையைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர், நரேந்திர சிங் தோமர் அவர்கள் #DigiClaim ஐத் தொடங்கிவைக்கிறார், இது பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவின் கீழ் NCIP மூலம் உரிமைகோரல் விநியோகத்தை தானியங்குபடுத்துகிறது.
தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு டிஜிட்டல் உத்வேகத்தை அளிக்கிறது
விவசாயிகளுக்கு கால தாமதமின்றி அனைத்து சேவைகளையும் பெற உதவும் வகையில் டிஜிட்டல் புரட்சியை விவசாயத் துறையில் கொண்டு வருவதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளது. ஒரு புதிய போர்டல், (GRAINS) (Grower Online Registration of Agriculture Input System) அமைக்கப்படும், அதில் வங்கி கணக்குகள், நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆதார் எண்கள், நில விவரங்கள் மற்றும் பயிர் சாகுபடி விவரங்கள் சேகரிக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படும். அரசின் உதவி தேவைப்படும் விவசாயிகளுக்கு தீர்வுகளை வழங்க, இது முக்கிய தளமாக அமையும். விவசாயத் துறை திட்டங்களின் பலன்களைப் பெற, இனி விவசாயிகள் பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் செல்ல தேவையில்லை என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட்: நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மார்ச் 21, மாநிலத்தின் வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்தார், அதில் நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் அமைச்சர் ஆற்றிய உரையில், மாநிலத்தில் விவசாயம் மேம்படுவதற்கு நுண்ணீர்ப் பாசனம் மிக முக்கியமான காரணியாக இருப்பதாகவும், அதனால்தான் இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் கூறினார். இயற்கை விவசாயத்திற்கு 26 கோடி, தென்னை விவசாயத்திற்கு 20 கோடி, மாற்று விவசாயத்திற்கு 14 கோடி, ஆண்டு முழுவதும் தக்காளி கிடைப்பதற்கு 19 கோடி, வெங்காயம் முழுவதும் கிடைப்பதை உறுதி செய்ய 29 கோடி என வேளாண்துறை அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
விரைவில் 725 ஆர்கானிக் கிளஸ்டர்களை உருவாக்க நடவடிக்கை
இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வரக்கூடிய சாத்தியமான பகுதிகளை கண்டறிய, சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் அடிப்படை கணக்கெடுப்பு நடத்தப்படும். 32 மாவட்டங்களில் 14,500 ஹெக்டேரில் 725 ஆர்கானிக் கிளஸ்டர்களை உருவாக்குதல், 10,000 ஹெக்டேருக்கு இயற்கை சான்றிதழுக்கான உதவி, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மண்புழு உரம் போன்ற கரிம இடுபொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆர்வமுள்ள 100 விவசாயிகள் குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் உற்பத்தி மையங்கள் அமைத்தல் ஆகியவை அடங்கும். அமிர்தகரைசல், மீன் அமிலம் போன்றவை 2023-24ல் 26 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
டெல்லி: வேலை வேண்டி ஸ்டெர்லைட் காப்பர் மீண்டும் திறக்கக் கோரி போராட்டம்
TN வேளாண் பட்ஜெட் 2023 தமிழக இளைஞர்களுக்கு அளித்த குட் நியூஸ்! என்ன தெரியுமா?
விவசாய பட்ஜெட்டில் நதி இணைப்பு குறித்து அறிவிப்பு இல்லாததை கண்டித்து போராட்டம்
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், நதிநீர் இணைப்புத் திட்டங்கள் மற்றும் குறைந்தளவு சலுகைத் திட்டம் குறித்து குறிப்பிடாத விவசாய பட்ஜெட்டை கண்டித்து, சத்திரம் பேருந்து நிலையம் அருகே, விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால், பதற்றம் நிலவியது. நதிகள் இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத விவசாய பட்ஜெட்டை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கரூர் பைபாஸ் ரோட்டில் காலி பானைகளுடன் மறியலில் ஈடுபட்டனர். “உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு மேட்டூருக்கு மாதாந்திரப் பங்கீட்டுத் தண்ணீரைத் திறந்துவிடத் தவறிவிட்டது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கோதாவரி, காவிரி, வைகை, குண்டாறு, அய்யாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் இன்றியமையாத ஒன்றாகும், இதற்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்,'' என்றார், அய்யாக்கண்ணு.
நாட்டு கோழி வளர்ப்பு குறித்து இலவச பயிலரங்கம்
நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி, பற்றிய இலவச பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பங்கு பெற 04142- 290249/ 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். இத் தகவல், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் உதவி பேராசிரியர் மற்றும் தலைவரால் பகிரப்பட்டது.
மேலும் படிக்க:
டெல்லி: வேலை வேண்டி ஸ்டெர்லைட் காப்பர் மீண்டும் திறக்கக் கோரி போராட்டம்
TN வேளாண் பட்ஜெட் 2023 தமிழக இளைஞர்களுக்கு அளித்த குட் நியூஸ்! என்ன தெரியுமா?
Share your comments