தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் பகுதிகளில் 50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகிக்கப்படுவதால், விவசாயிகள் பெற்றுப் பயனடையுமாறு வேளாண்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேளாண்மை உதவி இயக்குனா் ஆா்.பொன்ராஜ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
-
சங்கரன்கோவில் வட்டார விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நெல் விதைகள் சங்கரன்கோவில், வீரசிகாமணி, கரிவலம்வந்தநல்லூா் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகிக்கப்படுகிறது.
-
டிகேஎம்13, என்எல்ஆா், ஏடிடி45, ஏஎஸ்டி16, டிபிஎஸ்5 போன்ற சான்றுபெற்ற விதைகள் 50 சதவீத மானியத்தில் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
-
இந்த நெல் ரகங்கள் 115 நாள் வயதுடையவை.
-
காற்றில் சாயாது. நல்ல மகசூல் தரவல்லது.
-
எனவே, விவசாயிகள் இந்த நெல் விதைகளை வாங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பாசியைக் கட்டுப்படுத்த யூரியாவைக் குறைக்க வேண்டும்- வேளாண்துறை அறிவுறுத்தல்!
பயிர்களின் ஊட்டச்சத்து மருந்தான பழக்கரைசல்! தயாரிப்பது எப்படி?
Share your comments