இன்றைய காலக்கட்டங்களில் வீட்டிலிருந்துகொண்டே சம்பாதிக்கக் கூடிய பல வாய்ப்புகள் உள்ளன. அவற்றுள் நாட்டுக்கோழி வளர்ப்பு ஒன்று ஆகும். அதிலும் நாட்டுக்கோழி வளர்ப்பில் அதிக செலவுகள் இருக்காது. நம் வீட்டில் இருக்கக் கூடிய எஞ்சிய உணவுகள், பூச்சிகள், புழுக்கள் ஆகியவற்றை உண்டே இவை வளரக்கூடியவை. இவ்வாறு அமைய கூடிய நாட்டுக் கோழி வளர்ப்பைக் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
நம் நாட்டில் மொத்தமாக 18 கோழி இனங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக அசீல், சிட்டகாங், பாஸ்ரா, கடக்நாத் எனும் கருங்கால் நாட்டுக் கோழிகள் புறக்கடை முறையில் வளர்க்கப்படக் கூடியனவாக இருக்கின்றன.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
புறக்கடை முறையில் வளர்த்தலில், போதுமான நிழல், பசுந்தீவனம், தீவனம் ஆகியவற்றைக் கோழிகளுக்குக் கொடுத்தல் வேண்டும். கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் ஒரு செண்ட் நிலத்தில் கோழிகளை வளர்க்கலாம். கோழிகள் என்பவை புழு, பூச்சி, தானியங்கள் மற்றும் இலைதழைகளை உண்டு வாழும் தன்மை உடையனவாக இருக்கின்றன. எனவே, உணவு முறைகளில் எந்த பிரச்சனையும் இல்லை.
முட்டை இடுதலைக் குறித்து நோக்குகையில் நாட்டுக்கோழிகள் நாளின் முற்பகலில் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து முட்டையிடக் கூடியனவாக இருக்கின்றன. அவ்வாறு இல்லையெனில், கொட்டகையில் மூங்கில் கூடையில் காய்ந்த உமி, மரத்தூள், வைக்கோல் போன்றவற்றை நன்கு பரப்பி வைத்தால் முட்டைகளை இடுகின்றன. இதுவே, முட்டை பொரிப்பானைப் பயன்படுத்தினால், நூறு முதல் ஒரு லட்சம் வரையிலான குஞ்சிகளைப் பொறிக்க வைக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதே போல அடைப்பான்களைப் பயன்படுத்தினால் 250 முதல் 300 குஞ்சிகளை வளர்க்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை: இன்றே அப்ளை பண்ணுங்க!
கோழியின் வளர்பருவம்
நாட்டுக்கோழியின் வளர்ப்பருவம் என்பது குறிப்பாக 8 முதல் 18 வாரங்கள் ஆகும். 18 வாரத்திற்கு மேல் ஒரு கோழி ஒரு ஆண்டில் சுமார் 60 முதல் 80 முட்டைகளை இடும். கலப்பின நாட்டுக்கோழியாக இருப்பின் 240 முதல் 280 முட்டைகளை இடும். கோழிகளின் முட்டையிடும் இந்த காலக்கட்டத்தில் 18% புரதம், 2,700 கிலோ கலோரி எரிசக்தியுள்ள தீவனத்தைக் கொடுத்தல் வேண்டும் எனக் கூறப்படுகிறது. அதோடு, அந்த கோழி தினமும் 240 முதல் 300 மில்லி நீரைப் பருக வேண்டும்.
மேலும் படிக்க: இனி முன்பதிவு டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றலாம்: புதிய மாற்றம்!
கோழியின் விற்பனை நிலை
நாட்டுக்கோழிகளை அதன் வளர் காலங்களில் 3 முதல் 4 மாதங்களில் விற்றுவிட வேண்டும் எனக் கூறப்படுகிறது. அதோடு, கோழிகளின் எடை 1.3 முதல் 1.5 கிலோ எடை இருக்கும்போதே விற்று விட வேண்டும் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு விற்றால் லாபத்தினைப் பெறலாம். எனவே, கோழி வளர்ப்பதில் விருப்பம் உள்ளவர்கள் நாட்டுக்கோழிகளை வளர்த்துப் பயனடையுங்கள்.
மேலும் படிக்க
மின் கட்டண உயர்வை நிறுத்துங்க: பின்னலாடை தொழிலார்கள் கோரிக்கை!
Share your comments