பயிர்களைப் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்துப் பாதுகாப்பது, விவசாயத்தில் முக்கியமான பணியாகும். அதிலும் குறிப்பாக எலிகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாத்துப் பராமரிப்பது என்பது மிக மிக சவால் மிகுந்ததாகும்.
இணையவழிப் பயிற்சி (Online training)
இதனைக் கருத்தில்கொண்டு, எலிகள் மேலாண்மைத் தொழில்நுட்பம் குறித்து, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள MYRADA வேளாண் அறிவியல் நிலையம், இணையதளவழிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
Rodent Pest Management Techniques என்ற இந்த பயிற்சியில் பல்வேறு விஷயங்கள் விவசாயிகளுக்குக் கற்பிக்கப்பட உள்ளது.
நடைபெறும் நாள் (The day of the event)
ஜூன் 3ம் தேதி
பயிற்சி நேரம் (Training time)
காலை 11 மணி முதல் பகல்1 மணி வரை
எலிகள் மேலாண்மைத் தொழில்நுட்பம் குறித்து ஐதராபாத் NIPHM உதவி இயக்குநர் டாக்டர். ஏ. மரியதாஸ் அவர்கள் விளக்குகிறார்.
விவசாயிகள் மற்றும் இடுபொருட்கள் விற்பனையாளர்களின் கருத்துப் பகிர்வை பயிர் பாதுகாப்பு விஞ்ஞானி ஆர்.டி.சீனிவாசன் பதிவு செய்கிறார்.
துவக்கஉரை (Introduction)
விழாவில் MYRADA வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவரும், முதுநிலை விஞ்ஞானியுமான டாக்டர். பி. அழகேசன் அவர்கள் துவக்க உரை நிகழ்த்துகிறார்.
விருப்பமுள்ளவர்கள் இணையம் மூலம் இணைந்து பயிற்சி பெற்றுக்கொண்டுப் பயனடையலாம்.
Join with Zoom Meeting
கீழே உள்ள லிங்க்-கைப் பயன்படுத்திக்கொள்ளலாம்
https://us02web.zoom.us/j/6689229190?pwd=eVBiU1RaZHZ6eThvb3lqd
Meeting ID : 668 922 9190 Passcode : 2HMfYF
தொடர்பு கொள்ள (Contact)
மேலும் விபரங்களுக்கு பயிர் பாதுகாப்பு விஞ்ஞானி ஆர். டி.சீனிவாசன் அவர்களை 9444585699 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இணைந்து ஏற்பாடு (Arranged together)
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும், MYRADA வேளாண் அறிவியல் நிலையமும் இணைந்து இந்த இணையவழிப் பயிற்சியை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
சில மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்! சீரம் அதிகாரி அதிர்ச்சி தகவல்!
கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க 8 பள்ளிகள் ஒப்படைப்பு- ஈஷா நடவடிக்கை!
Share your comments