இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு தேனீக்கள் பெரிய அளவில் செழிக்க உதவுகிறது என்று தேனீ வளர்ப்புத் துறையில் செயல்படும் மக்கள் கூறுகின்றனர். பூச்சிக்கொல்லி பயன்பாடு இல்லாததால் தேனீக்கள் கரிமப் பண்ணைகளில் செழித்து வளரும். மேலும் பயிர் உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றன. "இயற்கை விவசாயிகள் தங்கள் வயல்களில் தேனீக்கள் இருந்தால் தரமான மகசூல் கிடைக்கும்" என்கிறார் தேனீ வளர்ப்பவர் பீம்சிங்.
விவசாயநிலங்களில் தேனீக்கள் இறக்கும் நிலைக் குறித்து பேசிய அவர், "தேனீக்கள் இறப்பதற்கு வீரியம் மிகுந்த பூச்சிக்கொல்லி தெளித்தல் ஒரு முக்கிய காரணம். ஆனால், தமிழகத்தில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,'' என்றார். ஐக்கிய நாடுகள் சபை மே 20 ஐ உலகத் தேனீ தினமாக அனுசரிக்கிறது. மேலும், இந்த ஆண்டின் கருப்பொருள் "தேனீக்களுக்கு ஆபத்துகளை ஒழித்தல் மற்றும் தேனீக்களால் ஏற்படும் நன்மைகளைத் தெரியப்படுத்தல்" என்பதாகும். நிகழ்வைக் குறிக்கும் வகையில் இப்பகுதியில் தேனீ வளர்ப்பு குறித்த பயிலரங்குகள் மற்றும் டெமோ அமர்வுகள் நடைபெற்றன.
கோவையில் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் எம்.புவனேஸ்வரி கூறியதாவது: மாவட்டம் முழுவதும் தேனைக் கலந்து ஒரே லேபிளில் விற்பனை செய்ய உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 160 விவசாயிகள் ஒன்றிணைந்து ‘ஜெய் ஹிந்த் ஹனி’ என்ற பெயரில் அமைப்பை உருவாக்கியுள்ளனர். தேனீ வளர்ப்பில் கன்னியாகுமரிக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. "மாவட்டத்தில் சுமார் 350 விவசாயிகள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இது கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 எனும் எண்ணிக்கை கூடுதலாக அதிகரித்துள்ளது," என்று கூறியுள்ளார்.
உலகத் தேனீ தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்திரா அவர்களின் வளாகத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தது. KVK இன் டாக்டர் பி உஷா ராணி கூறுகையில், தேனீ வளர்ப்பில் விவசாயிகளிடமிருந்து நல்ல வரவேற்பு உள்ளது என்று கூறியிருக்கிறார். மேலும் கூறுகையில், "நாங்கள் இன்று 40 பேருக்கு பயிற்சி அளிக்கிறோம், முன்னதாக வகுப்புகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 175 விவசாயிகள் தங்கள் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்து கொள்ள வந்துள்ளனர்" என்றும் அவர் கூறினார்.
தேனீ வளர்ப்பு நிபுணர் டாக்டர் கே சுரேஷ், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியரான டாக்டர் கே சுரேஷ் கூறுகையில், தேனீக்கள் குறித்து விவசாயிகளுக்குத் தற்போது நல்ல புரிதல் உள்ளது. இது தவிர, தேசியத் தோட்டக்கலை இயக்கமும், மாநில அரசும் தேனீ வளர்ப்பைப் பெரிய அளவில் ஊக்குவித்து வருகின்றன.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்டத்திற்கென பிரத்யேகமாகத் தேன் பிராண்டை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் படிக்க
Share your comments