விரைவுச் சாலைப் பணிக்காக கட்டிய வீட்டை நகர்த்தி விவசாயி ஒருவர் இடம் கொடுத்த சம்பவம் மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சாலையில் இருந்து 500 அடி தூரத்திற்கு வீட்டை நகர்த்திக் கொடுக்கிறார் இந்த விவசாயி.
விரைவுச்சாலை
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி சுக்விந்தர் சிங் சுகி, தனது சொந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 2 அடுக்குமாடி வீடு கட்டி இருந்தார். இந்நிலையில் டெல்லி, அரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களை இணைக்கும் வகையில் விரைவுச் சாலை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
அரசு உத்தரவு
இதில் டெல்லி- பஞ்சாப் மாநிலம் வழியாக அமைக்கப்படும் விரைவுச் சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் விவசாயி சுக்விந்தர் சிங் கட்டியிருந்த வீடு சிக்கியது. இதையடுத்து அவரது வீட்டை அகற்றுமாறு பஞ்சாப் அரசு உத்தரவிட்டதுடன் இதற்காக இழப்பீடும் வழங்கியது.
கனவு வீடு
ஆனால் தனது கனவு வீட்டை இடிக்காமல் அதை அங்கிருந்து நகர்த்த முடிவு செய்த விவசாயி சுக்விந்தர் சிங், தனியார் நிறுவனத்தை அணுகினார். இதையடுத்து அவரது வீட்டின் அஸ்திவார பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு அந்த பகுதியில் இருந்து 500 அடி தூரத்திற்கு நகர்த்திச் செல்லும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
புதிய முயற்சி
இது குறித்து சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளதாவது: டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலையின் வழியில் வருவதால் நான் வீட்டை மாற்றுகிறேன்.எனக்கு இழப்பீடு வழங்கப்பட்டது, ஆனால் வேறு வீடு கட்ட விரும்பவில்லை. இந்த வீட்டை கட்ட சுமார் 1.5 கோடி ரூபாய் செலவழித்துள்ளேன்.
250 அடி
தற்போது 250 அடி வரை வீடு நகரத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.விவசாயியின் இந்த புதிய முயற்சி மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்து.
மேலும் படிக்க...
Share your comments