1.விவசாயிகள் இடுபொருட்கள் பெறுவதற்கு ATM Card / Gpay / Phonepe / BHIM வாயிலாக பணம் செலுத்தலாம்
வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகள் இடுபொருட்கள் பெறுவதற்கு ATM Card / Gpay / Phonepe / BHIM வாயிலாக தங்களது பங்களிப்பு தொகையினை செலுத்தி இடுபொருட்களை பெற்று கொள்ளலாம். முன்னதாக பயிர் கடன் பெறும் விவசாயிகளின் நலன் கருதி, முதல் கட்டமாக, தொடக்க வேளாண் கூட் டுறவு கடன் சங்க ரேஷன் கடைகளுக்கு, 'மைக்ரோ' ஏ.டி.எம், கருவிகள் வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்தது குறிப்பிடதக்கது.
2.வேலையில்லாத இளைஞர்களுக்கு இலவச ஆடுகள்!
இலங்கையில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் அந்நாட்டு வேளாண்மைத் துறையால் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக வேலையில்லாத கிராமபுற இளைஞர்களுக்கு 70,000 ஆடுகள் வழங்கப்பட உள்ளன.
3.மீன் பிடிக்க வெடி மருந்தா? வரம்பு மீறினால் நடவடிக்கை எடுக்க உத்தரவு
நீர் நிலைகளில் வெடி மருந்துகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ள சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் உத்தரவிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெடிப்பொருட்களைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் யாரேனும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் வெடிப்பொருட்களையோ அல்லது தடை செய்யப்பட்ட மீன் வலைகளையோ பயன்படுத்தி மீன் பிடித்தால் அவர்கள் மீது காவல் துறையின் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Roof Top Kitchen Garden Kit வாங்க, இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்!
4.மே - ஜூன் மாதங்களில் தேங்காய் விலை ரூ.12 முதல் ரூ.14 வரை இருக்கும்!
தமிழக வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், `வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்பு திட்டமானது தேங்காய் மற்றும் கொப்பரைக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கி உள்ளது.இதன்படி வருகிற மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை தரமான தேங்காயின் பண்ணை விலை ரூ.12 முதல் ரூ.14 வரை இருக்கும். தரமான கொப்பரையின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.75 முதல் ரூ.80 வரை இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது"
5.வானிலை அறிக்கை
தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:
Share your comments