தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து 45 முதல் 50 காசுகள் வரை வியாபாரிகள் குறைத்து வாங்குகிறார்கள் என பண்ணையாளர்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்து கொண்டே இருக்கிறது.
இதையடுத்து நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் துணைத் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல அலுவலகத்தில் வியாபாரிகளுடன் கலந்துரையாடல் நடந்தது. இந்த கூட்டத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 50 கிராமிற்கு மேற்பட்ட முட்டைகள் அனைத்தையும் ஒரே விலையில் விற்பது என முடிவு எடுக்கப்பட்டது. இத்தகவலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.
2.விவசாயிகளுக்கு விநியோகிக்க உள்ள வீரிய ரக விதைகளின் தரமறிய காஞ்சிபுரம், விதைப்பரிசோதனை அலுவலர் அழைப்பு
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையின் கீழ், பஞ்சுப்பேட்டையில் விதைப்பரிசோதனை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இவ் அலுவலகத்திற்கு விதைப் பரிசோதனை அலுவலராக கு.ஜெயராமன் புதிதாக பொறுப்பேற்றார். அப்போது அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தாவது, நல் விதையே பயிர் விளைச்சலுக்கு ஆதாரம், விதையே பயிரின் எண்ணிக்கையை அதிகரித்து நல்ல விளைச்சலுக்கு வழி வகுக்கிறது. எனவே, வீரிய ரகங்களையே தேர்வு செய்து சாகுபடி செய்கின்றனர். காஞ்சிப்புரம் மாவட்டத்தில் உள்ள விதை விநியோகிஸ்தர்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைக்குவியல்களில் வீரிய ரக விதைகளை, பணி விதை மாதிரி எடுத்து ரூ.80/- கட்டணமாக செலுத்தி பரிசோதனை செய்து பகுப்பாய்வின் அடிப்படையில் அதிக விலை மதிப்புள்ள காய்கறி மற்றும் கீரை விதைக்குவியல்களின் தரத்தினை உறுதி செய்த பிறகு விவசாயிகளுக்கு விற்பனை செய்யுமாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
3.நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்
நாமக்கல் வட்டார பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மை -உழவர் நலுத்துறை சார்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என வேளாண்மை உதவி இயக்குநர். ப. சித்ரா, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம். நீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு வழங்குவதால் உர பயன்பாடு குறைகிறது. களைகளை கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர்ப் பாசன நிறுவனத்தின் மூலம் சொட்டுநீர் பாசன கருவி, தெளிப்பு நீர் பாசனக்கருவி, மழை மழை தூவான் அமைத்து தரப்படுகிறது.
4.ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் அமைக்க 50% மானியம்!
வேளாண்மை-உழவர் நலத்துறை தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பாக மாடித்தோட்டத் தளைகள் விநியோகம் செய்யப்படுகின்றன. முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் மாடி தோட்ட தளைகள் வழங்கப்படுகிறது. மொத்த விலை - ரூ.900 மதிப்பிலான மாடித்தோட்ட கிட் 50 சதவீத மானியத்தில் ரூ.450க்கு விநியோகிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற www.tnhorticulture.tn.gov.in/kit_new/ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
5.தேசிய விவசாய தினைத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் கல்லூரி மாணவர்கள்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டாரம், துவரங்குறிச்சி கிராமத்தில், தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான வயல்வெளிப்பள்ளி நடைபெற்றது. இப்பயிற்சியினை வேளாண் அதிகாரி சன்மதி மற்றும் உதவி வேளாண் அதிகாரி ராமன் ஆகியோர் நடத்தினர். அவர்கள், நஞ்சை தரிசில் உளுந்து சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். இவர்களுடன், கிராமப்புற வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறும் இறுதியாண்டு ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் மற்றும் புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டு தேசிய விவசாய தினம் டிசம்பர் 23 குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி இனிப்புகள் வழங்கினர்.
6.உணவு மற்றும் உரத்திற்கான மானியத்தை குறைக்க மத்திய அரசின் ஆலோசனை!
பல்வேறு காரணங்களால் நிதிப்பற்றாக்குறை அதிகரித்து வருவதாகவும், நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பணமதிப்புக் கொள்கையை ஈடுசெய்யும் நோக்கத்தில் மத்திய அரசு உணவு மற்றும் உர மானியச் செலவைக் குறைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் முதல் தொடங்கும் நிதியாண்டில் (2023-24) உணவு மற்றும் உர மானியத்தை ₹ 3.70 லட்சம் கோடியாக குறைக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. இது 2022-23ஆம் ஆண்டிற்கான செலவை விட 26 சதவீதம் குறைவாகும்.
7.செங்குத்து தோட்டம் அமைக்க 50% மானியம் வழங்கப்படுகிறது
நகர்புறங்களில் உயர் தொழில்நுட்ப முறைகளான செங்குத்து தோட்டம், அங்கிலத்தில் இம் முறை Vertical Farming எனப்படும். இம் முறை தற்போதுள்ள விவசாயத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. எனவே, செங்குத்து தோட்டம் மூலம் காய்கறி பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிக்க மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு அலகிற்கு ரூ.15,000, 50% பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற இணையதளம்
8.5000 விவசாயிகளுக்கு ரூ.10000/- மானிய உதவியில் மின்சார மோட்டார் பம்ப்-செட்டுகள்
5000 விவசாயிகளுக்கு ரூ.10000/- மானிய உதவி வழங்க ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் "மானியத்துடன் மின்சார மோட்டார் பம்ப்-செட்டுகள்" திட்டம் செயல்படுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மோட்டார் பம்ப்செட்களை வாங்குவதற்கு அல்லது பழைய திறனற்ற மின்சார மோட்டார் பம்ப்செட்களை மாற்றுவதற்கு - ஆணைகள் வெளியிடப்பட்டது. இதனை, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை - அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் அவர்கள் செய்தி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். www.aed.tn.gov.in
9.சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை முடிவதற்கான காலக்கெடு: நிதின் கட்கரி
சென்னை-பெங்களூரு விரைவு நெடுஞ்சாலைப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு 2024 ஜனவரி 26-ஆம் தேதி திறக்கப்படும் என்றார். ஹோஸ்கோட் அருகே நடைபெற்று வரும் பணிகள் குறித்து வான்வழி ஆய்வு மேற்கொண்ட அவர், பணியை முடிப்பதற்கான காலக்கெடு 2024 மார்ச் ஆகும் என்றார். மேலும், இந்த 8 வழிச்சாலையில் வாகனங்கள் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும் . 262 கிலோமீட்டர்களை 2 மணி 15 நிமிடங்களில் கடக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
10. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது/மிதமான மழை பெய்தன. இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவியதும் குறிப்பிடதக்கது. 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு உடங்களில் லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேலும் படிக்க:
ஜல்லிக்கட்டு: காளைகளுக்கு உடற்தகுதி சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்
5 மொழிகளில் தினை வகைகளின் பெயர்களை, இப் பதிவில் பார்க்கலாம்!
Share your comments