1. விவசாய தகவல்கள்

தமிழக அரசு: 38,000 பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்படும்!

T. Vigneshwaran
T. Vigneshwaran
5 goats each will be given to 38,000 women!

ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக ஊக்குவிக்கும் வகையில், 38,000 பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏழ்மை நிலையில் இருக்கும், கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற 38,800 பெண்களுக்கு, ரூ.73.65 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா 5 செம்மறியாடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அறிவித்தார்.

அதனை அமல்படுத்தும் விதமாக, கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள், வெள்ளாடுகள் வழங்க ரூ.75 கோடியே 63 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள 38,000 ஆதரவற்ற பெண்களுக்கு தலா ஐந்து ஆடுகள் என்று ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வாங்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதோடு, பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஏற்கனவே ஆடுகள், மாடுகள் வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டம் இல்லை என்றும், தகுதி வாய்ந்த பயனாளர்களை தெரிந்தெடுத்து, அதனை முறைப்படி வழங்குவதை கண்காணிக்கவும் கால்நடைத் துறையின் துணை இயக்குனர் தலைமையில் குழு அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க:

1ரூபாய்க்கு ரூ.10 கோடி- முழு விபரம் உள்ளே!

கிலோ ரூ.40 முதல் ரூ.50க்கு தக்காளி! விரைவில்!

English Summary: Government of Tamil Nadu: 5 goats each will be given to 38,000 women! Published on: 26 November 2021, 12:36 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.