மாநிலத்தில் விவசாயம் மேம்படுவதற்கு மிர்கோ பாசனம் மிக முக்கியமான காரணியாக இருப்பதாகவும், அதனால்தான் இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.
சாகுபடி பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பது, காலச்சூழலுக்கு மிகவும் இன்றியமையாததாகும். இதில், சொட்டுநீர் பாசனம், மழை துாவுவான் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் ஆகியவை அடங்கும். மத்திய அரசின் சார்பாக பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின்கீழ் வேளாண் பயிர்களுக்குச் சொட்டுநீர் பாசனம், தெளிப்பான், மழைத்தூவான் ஆகியவை மானியத்தில் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று மாநிலத்தின் வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்தார், அதில் நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இயற்கை விவசாயத்திற்கு 26 கோடி, தென்னை விவசாயத்திற்கு 20 கோடி, மாற்று விவசாயத்திற்கு 14 கோடி, ஆண்டு முழுவதும் தக்காளி கிடைப்பதற்கு 19 கோடி, வெங்காயம் முழுவதும் கிடைப்பதை உறுதி செய்ய 29 கோடி என வேளாண்துறை அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். நிலையான பருத்தி சாகுபடி பணியை தொடர்வதற்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயிர் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை மானியத்தில் மாநில அரசின் பங்காக ரூ.2,337 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவித்திருக்கின்ற ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ரூ.2,821 என்ற நியாயமான மற்றும் ஆதாய விலையினை (எஃப்ஆர்பி) விட அதிகமாக ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்க மாநில அரசு ரூ.253 கோடி ஒதுக்கீடு செய்யும் என வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதோடு, விவசாயிகளின் வங்கிக் கணக்கு, நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆதார் எண், நில விவரங்கள் மற்றும் பயிர் சாகுபடி விவரங்கள் முதலான அடிப்படையான விவரங்களுக்கு GRAINS (Grower Online Registration of Agriculture Input system) மூலம் டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு 'ஒரே நிறுத்தத் தீர்வாக' முன்மொழியப்பட்டுள்ளது.
மாநிலத்தைச் சேர்ந்த 150 விவசாயிகளுக்கு புதிய விவசாய நுட்பங்கள் குறித்து வெளிநாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் முன்மொழிந்தார். இஸ்ரேல், பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, எகிப்து, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நவீன விவசாய முறைகள் பின்பற்றப்படும் நாடுகளுக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றார்.
பட்ஜெட்டை சமர்ப்பித்த வேளாண் அமைச்சர், அதிக மகசூல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் சில நாடுகளில் அதிக உற்பத்தி கிடைக்கிறது என்றும், இந்த நாடுகளுக்குச் சென்று பார்க்க வாய்ப்பு கிடைத்தால், தமிழக விவசாயிகள் தங்கள் வயல்களில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆர்வமாக இருப்பார்கள் என்றும் கூறினார். பாரம்பரிய காய்கறி விதைகளை பிரபலப்படுத்த மரபணு வங்கியை உருவாக்கும் திட்டத்தை அறிவித்தார், மேலும் திட்டத்திற்காக 1.5 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டது. மாவட்ட அளவில் விதை திருவிழா நடத்துவதுடன், மாநில அளவிலான கருத்தரங்குகளும் நடத்தப்படும் என்றார்.
அதிகபட்ச பாரம்பரிய காய்கறி விதைகளை பாதுகாத்த விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று கூறிய அவர், இந்த பாரம்பரிய விதைகளை மாநில தோட்டக்கலை பண்ணைகளில் பெருக்கி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றார்.
மேலும் படிக்க
பட்ஜெட் விலையில் சூப்பர் போன்! அதிரடி ஆஃபர்!!
விவசாயிகளுக்கு இன்பச்செய்தி: பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 50% வரை மானியம்!
Share your comments