1. விவசாய தகவல்கள்

உணவுப்பொருட்களில் கலப்படத்தைக் கண்டறிவது எப்படி? எளிய டிப்ஸ்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
How to detect contaminants in foods? Simple Tips!
Credit: Green Queen

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படம் இருப்பதாக, திடீரென வெளிவரும் தகவல்கள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதுடன், வியாபாரிகள் மீது கொண்டுள்ள நம்பகத்தன்மையையும் இழக்கச் செய்கிறது.  

கலப்படமுள்ள பொருட்களை உட்கொள்வதால், பல்வேறு உடல் உபாதைகளுக்கும், தீராத நோய்களுக்கும் ஆளாகி இன்னலை சந்திக்கும் நிலை உருவாகிறது. 

கலப்படதைக் கண்டறியலாம் (Can detect admixture)

ஆனால் நாம் வாங்கும் உணவுப் பொருட்களில் உள்ள கலப்படத்தை கண்டறிவதற்கு பல்வேது வழிமுறைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொண்டு, இனி வரும் நாட்களில் விழிப்புடன் இருப்போம். 

பால் (Milk)

  • பளபளப்பான சாய் தள பரப்பின் மீது ஒரு சொட்டு பாலை ஊற்றவும்.

  • பாலாக இருந்தால் அப்படியே இருக்கும் அல்லது வெண்மை தடம் பதிந்து மெதுவாக கீழே இறங்கும்.

  • நீர் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் வெண்மை தடம் பதிக்காமல் உடனே கீழே ஒழுகி ஓடும்.

நெய் (Ghee)

  • கண்ணாடி கிண்ணத்தில் அரை தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணெயை எடுத்துக்கொள்ளவும்.

  • அதில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.

  • இந்த உருளைக்கிழங்கின் மீது அயோடினை 2 - 3 சொட்டுகள் சேர்க்கவும். அப்போது நெய்யில் பிசைந்த உருளைக்கிழங்கு நீலவண்ணம் தோன்றினால் கலப்படம் உள்ளது என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

காஃபித் தூள் (Coffee Powder)

  • ஒரு கண்ணாடி குவளையில் நீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி காப்பி தூளை சேர்க்கவும்.

  • காபித்தூள் மிதக்கும் சர்க்கரை தூள் போன்று மிதந்தால், அதில் சிக்கரி கலந்துள்ளது என்பது உறுதியாகிறது.

தேனீர் (Tea)

  • வடிகட்டும் தாளை எடுத்து அதில் சில டீத்தூளை(தேநீர் இலைகளைப்) பரப்பி வைக்கவும்.

  • பின்னர் குழாய் நீரில் வடிகட்டி தாளை கழுவவும். அதில் கறை இருந்தால் கலப்படம் என்பதை அறியலாம்.

  • தூய தேநீர் இலைகள் வடிகட்டி தாளில் கறை இருக்காது.

காய்கறிகள் (Vegetables)

 மஞ்சள் (Turmeric)

  • மஞ்சள் பொடியில் செயற்கை வண்ணத்தை கலந்து இருப்பதை அறிய கண்ணாடி குவளையில் நீர் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடியை சேர்க்கவும்.

  • கலப்படமான மஞ்சள் பொடி ஆக இருந்தால் அடர் மஞ்சள் நிறமாக இருக்கும்.

மேலும் படிக்க...

பெரம்பலூரில் அமோக விளைச்சல் -அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் குலைகள்!

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சு-தோல்வியில் முடிவடைந்தது!

மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!

English Summary: How to detect contaminants in foods? Simple Tips! Published on: 05 January 2021, 12:04 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.