திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நபருக்கு அதிகளவு யூரியா உரத்தை விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உர விற்பனையாளர்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேளாண்மை இணை இயக்குநர் இரா. கஜேந்திர பாண்டியன் விடுத்தள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
உரம் கையிருப்பு (Fertilizer stock)
இம்மாவட்டத்தில் ராபி (Rabi) பருவ சாகுபடி பணி தீவிர மாக நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்கள் மாவட்டத்தின் பல்வேறு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.விவசாயிகளின் நலன் கருதி யூரியா உரம் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆட்சியர் விசாரணை (Collector Inquiry)
இந்நிலையில், மாதந்தோறும் அதிகளவு யூரியா வாங்கியோர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒரே விவசாயிக்கு அதிக உரம் விற்பனை செய்த உர விற்பனையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு அவர்களின் விவசாயத் தேவைக்கு மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும். உரம் வாங்க வருவோர் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி உரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.
உரிமம் நிரந்தரமாக ரத்து (The license permanently revoked)
இம்மாவட்டத்தில் கடந்த மாதங்களில் ஒரு நபருக்கு அதிகளவு யூரியா உரம் விற்பனை செய்த உர விற்பனையாளர்களின் உர உரிமங்களை 14 நாள்கள் தற்காலிக ரத்து செய்து உத்தர விடப்பட்டது.
இந்நிலை தொடரும் பட்சத்தில் உரக் கட்டுப்பாட்டுச்சட்டம் 1985ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதாவது உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
காய்கறிகளுக்கு காப்பீடு - மார்ச் மாதம் வரை காலக்கெடு!
மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!
ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!
Share your comments