10,000 புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் உருவாக்கம் மற்றும் ஊக்குவிப்பு' என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசின் புதிய முயற்சியாக தேன் விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று தொடங்கி வைத்தார்.
விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பதன் மூலம் அவர்களை வளமானவர்களாக மாற்ற, நாடு முழுவதும் 10,000 புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPO) உருவாக்க மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதன் ஒரு பகுதியாக, தேன் விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பை தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் தேன் விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பை (Honey Farmer Producer Organizations) மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.
இணையம் மூலமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், புதிய தேன் விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள், விவசாயிகள் மற்றும் விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள் நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து பேசிய அமைச்சர், "இந்தியாவில் தேனீ வளர்ப்பு என்பது கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களிடையே பெரும்பாலும் அமைப்பு சாரா தொழிலாக விளங்கி வருகிறது. நமது நாட்டில் தேன் உற்பத்திக்கு நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கும் போதிலும், தேனீ வளர்ப்புத் தொழில் வளர்ச்சியடையாமல் உள்ளது," என்றார்.
இன்று தொடங்கப்பட்டுள்ள தேன் விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, சிறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் லட்சியத்தை அடைய உதவும் என்று திரு தோமர் மேலும் தெரிவித்தார். 10,000 புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் உருவாக்கம் மற்றும் ஊக்குவிப்பு' என்னும் திட்டத்தின் கீழ், தேன் விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க..
மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் அரசு பரிசீலிப்பதாக வேளாண்துறை தகவல்!
உழவர் -அலுவலர் தொடர்புத் திட்டம் சேலத்தில் அறிமுகம்!!
மானியத்தில் திறந்தவெளி கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம்!!
Share your comments