1. விவசாய தகவல்கள்

மழையில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க காப்பீடு - 2 மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Insurance to protect crops from rain - Call for 2 District Farmers!
Credit : Gardening

கரும்பு, பருத்தி மற்றும் எண்ணெய் வித்துகளை பயிரிட்டுள்ள விவசாயிகள், அவற்றுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:

  • இந்த மாவட்டத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு இதுவரை ரூ.1.376.33 கோடி வழங்கப்பட்டுள்ளது.

  • இந்தத்திட்டத்தின்படி, சிறுதானியங்களான சோள பயிருக்கு ரூ.127.50ம், கம்புக்கு ரூ.102.75ம், ராகிக்கு ரூ.122.25ம், மக்காச்சோளத்திற்கு ரூ.256.50ம், உளுந்துக்கு ரூ.214.66ம், எண்ணெய் வித்துகளான நிலக்கடலைக்கு ரூ.294.75ம், எள்ளுக்கு ரூ.87ம், சூரியகாந்திக்கு ரூ.100.50ம், பருத்திக்கு ரூ.264.04ம், கரும்புக்கு ரூ.2,600ம் பிரீமியம் தொகையாக விவசாயிகள் செலுத்த வேண்டும்.

  • சோளம் மற்றும் ராகி பயிர்களுக்கு பிரீமியம் செலுத்த வேண்டிய கடைசி நாள் வரும் 15ம் தேதியாகும்.

  • கம்பு 2ம் தேதி மக்காச்சோளத்துக்கு 16ம் தேதி, உளுந்து மற்றும் நிலக் கடலைக்கு 31ம் தேதி, எள், சூரியகாந்தி மற்றும் பருத்திக்கு 2021 ஜனவரி 20ம் தேதி, கரும்புக்கு 2021 அக்டோபர் 3ம் தேதி என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • மேலும், விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Credit: The Guuny Stock

விருதுநகர்

இதேபோல், கனமழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க காப்பீடு செய்துகொள்ளுமாறு விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிரீமியம் தொகையாக நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.355ம், மக்காச்சோளத்துக்கு ரூ.262ம், பருத்திக்கு ரூ.430ம் செலுத்த வேண்டும். விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அருகிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் வங்கிகள், பொது சேவை மையங்கள் ஆகிவற்றில் விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்

  • நிலத்தின் அடங்கல்

  • வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம்,

  • ஆதார் அட்டை

ஆகிய வற்றின் நகலை எடுத்துச்செல்லவும்.

தமிழகத்தைத் தொடர்ந்து புயல்கள் அச்சுறுத்தி வருவதால், விவசாயிகள் தவறாமல் காப்பீடு செய்து பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகவல்
சுப்பையா
வேளாண்மை உதவி இயக்குநர்
ராஜபாளையம்

மேலும்  படிக்க...

இயற்கை தேனி வளர்ப்பாளர்கள் பக்கம் திரும்பிய வாடிக்கையாளர்கள் - தேனில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய டிப்ஸ்!

விண்வெளியில் முள்ளங்கி சாகுபடி - அசத்திய Astronaut!

ஒரு அங்குலம் மண் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?

English Summary: Insurance to protect crops from rain - Call for 2 District Farmers! Published on: 06 December 2020, 12:35 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.