மதுரை மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிதாக 887 எக்டேரில் சாகுபடி (Cultivation) செய்ய ரூ.3.98 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மானியம்
இத்திட்டத்தில் புதிதாக வீரிய ரக காய்கறிகள், மாஅடர் நடவு, கொய்யா அடர் நடவு, பப்பாளி சாகுபடி, உதிரிமலர்கள், கிழங்கு வகை மலர்கள், எலுமிச்சை, அத்தி மற்றும் டிராகன் பழங்கள் (Dragon Fruit) சாகுபடி செய்வதற்கு ரூ.1.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 40 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படுகிறது. தனி நபருக்கு நீர் சேமிப்பு அமைக்க, நிழல் வலைக்குடில், நிலப்போர்வை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இயற்கை விவசாயம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை இனத்தின் கீழ் ரூ.22.50 லட்சம், தேனீ காலனி பெட்டிகள் வளர்ப்பதற்கு 50 சதவீத மானியத்தில் ரூ.19.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
50 சதவீத மானியத்தில் குறைந்த செலவில் வெங்காய சேமிப்பு கிடங்கு, சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ.122.50 லட்சம், நடமாடும் காய்கறி விற்பனை வண்டிக்கு ரூ.7.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு வேளாண் விரிவாக்க மைய தோட்டக்கலை உதவி இயக்குனரை அணுகலாம் என துணை இயக்குனர் ரேவதி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
பயிர்க் காப்பீட்டு கட்டணத்தில் மாற்றம்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!
Share your comments