பூச்சிகளில் பல விதங்கள் உண்டு. இருப்பினும் விவசாயத்தைப் பொருத்தவரை, பயிருக்கு நன்மை பயக்கும் பூச்சிகள், தீமை விளைவுக்கும் விஷ ஜந்துகள் என இரண்டு விதமாக வகைப்படுத்தலாம்.
நன்மை தரும் தாவரங்கள்
அதேநேரத்தில், தாவரங்களிலும் பயிருக்கு நன்மை பயக்கக்கூடியவை என்று அழைக்கப்படும் சில தாவரங்கள் உள்ளன. அவற்றை விவசாயிகள் தெரிந்து வைத்துக்கொண்டு, தங்கள் பயிரோடு விதைத்தால், பலவித நன்மைகளைப் பெறுவது உறுதி.
அந்த வரிசையில், சில தாவரங்களையும் அவை அளிக்கும் நன்மைகளையும் தற்போது பட்டியலிடுகிறோம்.
தாவரம் - ஆவாரம்
பயன் : இதன் இலையில் உள்ள மணிச்சத்து மணி பிடிக்க உதவும்.
முருங்கை இலை மற்றும் கருவேப்பிலை
சத்து : இவற்றில் இரும்புச்சத்து நிறைந்துள்ளன.
பயன் : இதனால் பூக்கள் நிறையப் பிடிக்கும்
எருக்கம் இலை
சத்து : இதில் போரான் சத்து அதிகமாகக் காணப்படுகிறது.
பயன் : இதனை வளர்ப்பதால், காய், பூ அதிகம் பிடிக்கும். காய் கோணலாகமல் இருக்கும்.
புளியந்தலை
சத்து : துத்தநாக சத்து
பயன்: செடியில் உள்ள இலைகள் சிறியதாக இல்லாமல் ஒரே சீராக இருக்கும். பயிரின் வளர்ச்சி அதிகரிக்கும்.
செம்பருத்தி மற்றும் அவரை இலை
சத்து : தாமிர சத்து
பயன்: தண்டுப்பகுதி மெலிந்து காணப்படாது
கொளுஞ்சி மற்றும் தக்கப்பூண்டு
சத்து : தழைச்சத்து
பயன்: பயிர் செழித்து காணப்படும்
துத்தி இலை
சத்து: சுண்ணாம்புச் சத்து (கால்சியம் கார்பனேட்)
பயன்: சத்துக்களைப் பயிரின் பிற பாகங்களுக்குப் பிரித்துக் கொடுக்கும்.
எள்ளுச் செடி
சத்து : கந்தகம் (Sulphur)
பயன் : செடி வளர்ச்சி அதிகரிக்கும். தண்டு மெலிந்து இருக்காது மஞ்சள் கலராக மாறாது.
வெண்டை இலை
சத்து: அயோடின்(சோடியம்)
பயன்: மகரந்தம் அதிகரிக்கும்
மூங்கில் இலை
சத்து: சிலிக்கா
பயன்: பயிர் நேராக வளரும்
பசலைக்கீரை இலை
சத்து: மெக்னீசியம்
பயன்: இலை ஓரம் சிவப்பாக மாறாது
அனைத்து பூக்கள்
சத்து: மாலிப்டினம்
பயன்: பூக்கள் உதிராது
நொச்சி இலைப் பூச்சிகளை விரட்டும்
வேம்பு : புழுக்கள் வராமல் பாதுகாக்கும்
தகவல்
ஆர்.சுதா
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர்
நாகப்பட்டினம்
மேலும் படிக்க...
இதைச் செய்தால் போதும்- விவசாயத்தில் கூடுதல் வருமானம் உறுதி!
சம்பா பயிர் காப்பீடு - விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments