போலி உயிரி (பயோ) பூச்சி மருந்துகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து (License revoke) செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து காஞ்சிபுரம், வேளாண்மை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது
கலப்பட மருந்துகள் (Combined drugs)
வெளிமாநிலத்தில் போலியான உயிரி (பயோ) பூச்சி மருந்துகளுடன் இதர பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவது குறித்து புகார்கள் எழுந்துள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.
மருந்து ஆய்வாளர்கள் குழு (Team of Pharmacologists)
இதனால் பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு அனைத்து பூச்சிமருந்து விற்பனைக் கடைகளை அணுகி, உரியமுறையில் ஆய்வு மேற்கொள்ளுமாறு முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
அதிரடி ஆய்வு (Action inspection)
இந்த ஆய்வின் போது போலியான உயிரி (பயோ) பூச்சிமருந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டாலோ, போலி உயிரி (பயோ) பூச்சிமருந்துகளுடன் இதர பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கலப்படம் செய்து விற்பனை செய்வது தெரிய வந்தாலோ உரிமம் ரத்து செய்யப்படும்.
மேலும் பூச்சிக்கொல்லிகள் சட்டம் 1968 மற்றும் விதிகள் 1971-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அங்ககச் சான்று (Organic proof)
இவ்வாறான போலி உயிரி (பயோ) பூச்சிமருந்துகளைப் பயன்படுத்துவதால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கான அங்ககச் சான்று கிடைக்கப் பெறுவது கடினம்.
தரம் பாதிக்கப்படும் (Quality will be affected)
இதைத்தவிர விளைப்பொருட்களின் தரம் மற்றும் மதிப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதன் தொடர்பான புகார்களை உரிய வட்டார வேளாண் உதவி இயக்குநர்களிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இயற்கை முறையில் வாழை சாகுபடி-என்னென்ன மருந்துகள் தேவை?
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!
Share your comments