1. விவசாய தகவல்கள்

புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- தமிழகத்திற்கு மிகக் கனமழை எச்சரிக்கை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
New depression in the Bay of Bengal - Heavy rain warning for Tamil Nadu!
Credit : Times of india

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பரவலாக மழை (Widespread rain)

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக மழைப் பெய்து வருகிறது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (Depression area) 

இந்த சூழ்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிகக் கனமழை (Very heavy rain)

வங்கக் கடலில், ஆந்திரா, ஒடிசா இடையே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாகத் தெரிவித்தார்.


12.07.21


நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று இனி மின்னலுடன் கூடிய மிகக் கனமழையும், கோவை, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மிதமான மழை (Moderate rain)


தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,திருப்பூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இலேசான மழை (Light rain)

வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்காக எச்சரிக்கை (Warning for fishermen)

வங்கக்கடல் பகுதிகள் (Areas of the Bay of Bengal)

இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில், பலத்தக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள் (Areas of the Arabian Sea)

15.07.21 ம் தேதி வரை (Until 15.07.21)

தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

வாழை சாகுபடியில் அதிக மகசூல் பெற சிறந்த வழிமுறைகள்: வேளாண் அதிகாரி விளக்கம்!

குறுவை சாகுபடிக்கு விதை விதைத்து விட்டு மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்

English Summary: New depression in the Bay of Bengal - Heavy rain warning for Tamil Nadu! Published on: 12 July 2021, 07:05 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.