நாடு முழுவதும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் சில முக்கிய மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது. அதன்படி, வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கும் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீ்ழ் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
மனித-வனவிலங்கு மோதலை தவிர்க்கும் வகையில் முக்கிய நடவடிக்கையாக பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா (பி.எம்.எஃப்.பி.ஒய்) திட்டத்தின் கீழ் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு கூடுதல் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு விவசாயிகள் விண்ணப்பிததன் மூலம் அதற்கான காப்பீட்டைப் பெறலாம்.
பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா திட்டம் - PMFBY
பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா திட்டம் (PMFBY) 2016 இல் தொடங்கப்பட்டது. பழைய பயிர் காப்பீடு திட்டத்திற்கு மாற்றாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA - என்.டி.சி.ஏ) அனைத்து மாநில கள இயக்குநர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில், வனவிலங்குகளால் ஆபத்து ஏற்படும் பகுதிகளிலும், பயிர்களுக்கு ஏற்படும் சேதத்திற்கும் கூடுதல் காப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
மாட்டுச் சாணம் மூலம் "பெயிண்ட்" தயாரிப்பு - கால்நடை விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம்!!
மலைவாழ் பகுதி பயிர்களுக்கு கூடுதல் காப்பீடு
காப்பீடு தொகையை மதிப்பிடுவதற்கான விரிவான நெறிமுறை மற்றும் நடைமுறையை MoEFCC மற்றும் காப்பீட்டு நிறுவனத்துடன் கலந்தாலோசித்து அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதிகள் மற்றும் யானை, புலிகள் பாதுகாப்பு பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு மட்டும் இந்த கூடுதல் காப்பீடு வழங்கப்படும் என்றும், இதற்கு மாநில அரசுகள் உரிய மானியம் வழங்க பரிசீலிக்கலாம் என NTCA - என்டிசிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலங்களில் ஏற்கனவே பயிர் சேத காப்பீடுக்கான இழப்பீட்டை செலுத்தியிருந்தாலும், காட்டு விலங்குகளால் ஏற்படும் சேதம் குறித்து பல்வேறு மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளின் படி வழிகாட்டுதல்கள் இதல் இணைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இதன் மூலம் காப்பீடு பெற்று நிவாரணத்தொகையை பெற முடியும்.
கல்லா கட்டும் "கடக்நாத்" - கருங்கோழி வளர்ப்பின் வளமும் நலமும்..!
காப்பீடு பட்டியலில் உள்ள விலங்குகள்
கடந்த காலங்களில் வனவிலங்குகளால் ஏற்பட்ட பயிர்சேதங்கள் குறித்த கணக்கெடுப்பைக் கொண்டு MoEFCC மற்றும் மாநில வனத்துறைகளின் வழிகாட்டுதலின் படி வனவிலங்குகள் வரையறை செய்யப்படும். மகாராஷ்டிரா மாநிலத்தில் காட்டுப்பன்றி, மான், யானைகள் மற்றும் சிறுத்தை புலிகள் போன்ற விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
NTCA அதிகாரிகள் கூறுகையில், “ஆரம்ப கட்டத்தில் இந்த கூடுதல் காப்பீடு குறிப்பிட்ட வரையரையின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும். கடந்த காலங்களில் காட்டு விலங்குகளின் தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்த கணக்கெடுப்பு கொண்ட பயிர்களுக்கு மட்டுமே காப்பீடு கிடைக்கும். இந்த காட்டு விலங்குகளின் பட்டில் மற்றும் காப்பீடு பரப்பளவு எல்லாம் மாநில அரசால் அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.
மாதந்தோறும் லாபம் வழங்கும் கோழிப்பண்ணை! இப்போதே அமைக்க கடன் வழங்கும் வங்கிகள்! வாங்க தொழில் தொடங்கலாம்..!!
Share your comments