1. விவசாய தகவல்கள்

இயற்கை விவசாயம் : இயற்தை விவசாய முறைகள்.

Sarita Shekar
Sarita Shekar

இயற்கை விவசாயம் என்றால் என்ன ?

இயற்கை விவசாயம் முறை இந்தியாவில் தொட்டு பின்பற்றப் பட்டு வரும் முறையாகும். மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் இயற்கை கழிவுகளை நன்றாக மட்கச்செய்து, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை மண்ணிற்கு அளிக்கிறது. அதை பயிர்கள் கிரகித்து கொள்கின்றன. நுண்ணுயிரகள் மெதுவாகவும் சீராகவும் ஊட்டச்சத்துக்களை வெளியிடுகின்றன. இதனால் மாசற்ற சுற்றுச் சூழலில் நல்ல மகசூலினை பெற முடிகிறது.

அமெரிக்க இயற்தை விவசாய ஆராய்ச்சி குழுவின் விளக்கப்படி “இயற்கை விவசாயம் என்பது செயற்கை ஊக்கிகள் உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை முடிந்த அளவில் தவிர்த்து பயிர்சழற்சி, இயற்கை மற்றும் இயற்கை உரம் பயன்படுத்துதல் இவற்றின் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் நல்ல மண்வளம் அடைவதாகும்

”உணவு மற்றும் வேளான் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி இயற்க்கை விவசாயம் என்பது இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, உயிரியல் செயல்பாடுகள் இயற்க்கை  கழுவுகள் ஆகியவற்றைக் கொண்டு சுற்றுச்சுழலின் ஆரோக்கியத்தைக் காக்கும் பயிர் வளர்ப்பு முறையாகும். இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையிலான உழவியல், இயந்திர முறைகளை பின்பற்றுதல் இதின் தனித்தன்மையாகும்.

இயற்கை விவசாயம் ஏன் தேவை ?

வளர்ந்து வரும் மக்கள் எண்ணிக்கை காரணமாக, வேளாண் உற்பத்தியை நிலைப் படுத்தல் மட்டுமல்லாது அதை சீரான முறையில் உயர்த்துதலும் தற்போதைய தேவையாகிறது.

அதிக இடுபொருட்கள் மூலம் வேளாண்மையில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி அதன்மூலம் தன்னிறைவை அடைந்திருக்கிறோம் என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளனர். ஆகையால் தாக்கமான பின்விளைவுகளைக் கொண்ட இரசாயன வேளாண் முறையை தவிர்த்து, இயற்கை ஆரோக்கியத்தை பாதுகாக்கக் கூடிய அங்கக வேளாண்மையை பின்பற்றுதல் வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் மகத்தான சேவை என்று கூறுகின்றனர். அங்கக வேளாண் முறையில் அதிக மகசூல் பெறும் வழியினை அறிதல் மிகவும் அவசியம் என்று கருதுகின்றனர்.

இயற்தை விவசாயத்தின் பண்புகள்:

  • மண்ணின் இயற்கை தன்மையை பராமரித்தல், மண் நுண்ணுயிர்களின் செயல்பாட்டினை அதிகரித்தல், கவனமாக இயந்திர ஊடுருவல் - இவைகளின் மூலம் மண்வளத்தை நீண்ட நாள் பாதுகாத்தல்.
  • மறைமுகமாக பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்களை அங்கக கழிவுகள் வழங்கும். இவ்வூட்டச்சத்துக்களை நுண்ணுயிர்களின் உதவியால் பயிர்கள் உட்கொள்கின்றன.
  • நிலத்திற்கு தகுந்த பயிர் வகை உபயோகித்தல் உயிரியல் தழைச்சத்து நிலைநிறுத்தல் மற்றும் அங்கக பொருட்களின் சுழற்சி முறை மூலமாக தழைச்சத்து தன்னிறை அடையப் பெறுகிறது.
  • களை, பூச்சிகளிலிருந்து பாதுகாப்பு, நோய் பாதுகாப்பு - இவை மூன்றையும் பயிர் சுழற்சி இயற்க எதிரிகள் பயன்பாடு, அளவான ரசாயன தலையீடு, எதிர்ப்புசக்தி மிக்க பயிர்களை பயன்படுத்துதல், அங்கக எருவூட்டல் போன்றவற்றின் மூலம் அடைதல் இதன் சிறப்பாகும்.
  • இயற்கை (அங்கக) வேளாண் முறையில் கால்நடைகளுக்குக் கிடைக்கும் தீவனங்கள் நச்சின்றி இருப்பதோடு மட்டுமல்லாமல் கால்நடைகளின் கழிவுகள் வீணாகாமல் முறையாக பயன்படுத்தப்படுகிறது.
  • வேளாண் முறையில் கவனம் செலுத்தல் மூலம் வனவாழ்வு மற்றும் இயற்கை உறைவிடைத்தை பாதுகாத்தல் சாத்தியமாகிறது

இயற்கை வேளாண்மை நன்மைகள்:

இந்த முறை விவசாயத்தில், ஆரோக்கியமான, தூய உணவுப் பொருட்களைப் பெறலாம். அப்படிப் பெறப்படும் உணவுப் பொருட்கள் மிகுந்த ருசியுடனும் இருக்கும் என்கிறார்கள். அதோடு, விவசாயச் செலவு குறைந்து, உற்பத்தி மற்றும் லாபம் அதிகரிக்கும் என்றும் இயற்கை முறையில் பயிரிடும் விவசாயிகள் கூறுகின்றனர்.
பூச்சிக்கொல்லிகள் இன்றி விவசாயம் செய்ய முடியாது என பல விவசாயிகள் கூறிவந்தனர். அவர்களுக்கு மத்தியில் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விளைவிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்துள்ளது.
மண்ணில் தேவையற்ற உரங்கள் போடாமல், பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்காமல் இருப்பதாலும், மண்ணின் சத்துகள் பாதுகாக்கப்படுகின்றன. மண்ணின் மலட்டுத்தன்மையைக் குறைக்க இயற்கையான முறைகளைத் தேர்வு செய்யுங்கள் என்றார் மறைந்த இயற்கை விவசாயி நம்மாழ்வார்.
இந்தியாவில் தற்போது இயற்கை முறையில் வேளாண்மை செய்வதை ஊக்குவிக்க பல தன்னார்வ அமைப்புகள் பெருகிவிட்டன. இந்த அமைப்புகளில் பலரும் தங்கி, நேரடிப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இயற்கை விவசாயத்தில் எதிர்பார்த்த அளவு அதிக மகசூல் கிடைக்காது என்கிற பொதுவான கருத்து உள்ளது. ஆனால், இந்தக் கருத்தையும் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் மாற்றிக் காட்டியிருக்கிறார்கள்.
தமிழகத்தில், பாரம்பரிய நெல் ரகங்களைச் சேகரிக்க பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். இச்செயலில் மிகமுக்கியமானவர் நெல் ஜெயராமன். இவர் தமிழகத்தின் பாரம்பரிய நெல் விதைகளைச் சேகரித்து, பலரையும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்த வைத்தார்.

அடுத்து, நமக்குக் கிடைத்த நெல் விதைகளை கூடுதலாக உற்பத்தி செய்ய முடியுமா? மக்களுக்குத் தேவையான விளைச்சலைக் கொடுக்க இயலுமா என்பன போன்றவற்றுக்கு வரும்காலம் தான் விடை சொல்லும்.

English Summary: Organic farming: Natural farming methods. Published on: 12 April 2021, 12:38 IST

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.