1. விவசாய தகவல்கள்

நெல்லும் வாத்தும் நெருங்கிய நண்பர்கள்: ஒருங்கிணைந்த பண்ணை திட்டம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Paddy and goose are best friends: Integrated Farm Project

நெல் சாகுபடி செய்யும் வயல்களில் வாத்து வளர்ப்பதால் வரும் நன்மைகள், மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை திட்டம், அதன் பயன்கள் பற்றி, இந்த பதிவில் பார்க்கலாம்.

  • களை கட்டுப்பாடு
  • நல்ல கற்றோட்டம்
  • பூச்சிக்கட்டுப்பாடு
  • எச்சத்தின் மூலம் 10:8:35 என்ற அளவில் தழை மணி மற்றும் சாம்பல் சத்துக்கள்
  • அதிக தூர் எண்ணிக்கை மற்றும் விளைச்சல்

எப்படி?

  • ஒரு ஏக்கருக்கு ஒரு மாத வயதுள்ள 160 வாத்து குஞ்சுக்களை நட்ட 10ஆம் நாள் நெல் வயலில் விட வேண்டும்.
  • தினமும் 8 மணி நேரம் மேய விட வேண்டும்.
  • புடை கட்டும் பருவம் வரை நெல் வயலில் வாத்துக்களை மேய அனுமதிக்கலாம்.

வருமானம்:

இதர வருமானமாக வாத்துக்கள் மூலம் குறைந்தது ரூபாய் 20,000 ஏக்கருக்கு பெறலாம். நெல்லில் இயற்கை விவசாயத்திற்கு இனிய வரவாக அமையும் இந்த வாத்துக்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பயன்கள்:

  • அதிக உணவு உற்பத்தியின் மூலம் நாட்டின் மக்கள் தொகையின் தேவையை சமநிலைபடுத்தப்படுகிறது.
  • மறுசுழற்சி மற்றும் வேளாண் சார் அங்ககம் போன்றவற்றின் மூலம் பண்ணை வருவாயானது உயர்த்தப்படுகிறது.
  • நீடித்த மண் வளம் மற்றும் அங்கக கழிவுகளின் மறுசுழற்சி மூலம் உற்பத்தி அதிகரிக்கிறது.
  • ஒருங்கிணைந்த வேளாண் சார் நுட்பத்தின் மூலம் உணவுகளிலுள்ள புரதம், கார்போஹைட்டிரேட் , கொழுப்பு, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை செறிவூட்டுகிறது.
  • விவசாயிகள் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பானது அதிகரிக்கிறது.

மானியம்:

தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணை திட்டம், இதற்கான மானியத்தை வழங்கும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

சேலம்: காய்கறிகள் விற்கும் ஆறு நடமாடும் வாகனங்கள் விரைவில் களமிறங்கும்

தமிழகம்: இன்று முதல் தனியார் பால் விலை அதிரடியாக உயர்வு!

English Summary: Paddy and goose are best friends: Integrated Farm Project Published on: 12 August 2022, 04:42 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.