சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கண்ணனூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு நெல் கொள்முதல் நெல் கொள்முதல் செய்வது திடீரென நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
நெல் கொள்முதல் நிலையம் (Paddy Procurement Station)
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சின்னக் கண்ணனூர் கிராமத்தில் கடந்த 3ம் தேதி முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் நெல் மூட்டைகளைக் கொண்டு வரது இரவு-பகலாகக் காத்துக்கிடக்கின்றனர்.
தகராறு (Dispute)
இந்நிலையில் இங்குக் கூடுதலாக கொள்முதல் நிலையம் திறக்க நுகர்பொருள் வாணிபக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக கிராமத்தில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
நெல் கொள்முதல் நிறுத்தம் (Paddy procurement halt)
இதையடுத்து சின்னக் கண்ணனூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு நுகர்பொருள் வாணிப்பக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது. இதன் காரணமாக இங்கு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது.
இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தெரிவித்த நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, கிராமத்தில் இரு தரப்பைச் சேர்ந்தவர்களிடம் சமாதானம் பேசி, அதன் பின்னர் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் என்றார்.
காரைக்கால் (Karaikal)
இதனிடையே காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில், நெடுங்காடு, திருநள்ளாறு, திருப்பட்டினம் பகுதிகளில்
5,000 எக்டேர் பரப்பில் சம்பா நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது, நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்னும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், 30 நாட்களுக்கும் மேலாக வயல்களிலும், சாலைகளிலும் விவசாயிகள் நெல்லைக் கொட்டி வைத்துள்ளனர்.
தற்போது பெய்துவரும் மழையால், நெல் வீணாகிறது. இதன் காரணமாக, தனியார் வியாபாரிகளிடம், அடிமாட்டுவிலைக்கு நெல்லை விற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை (Farmers demand)
எனவே மத்திய-மாநில அரசுகள் தலையிட்டு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- தமிழக அரசு அறிவிப்பு!
Share your comments