1. விவசாய தகவல்கள்

PM Kisan: விவசாயிகளுக்கு ரூ.2000 ரூபாய்! தேதி இதுதான்!!

Poonguzhali R
Poonguzhali R
PM Kisan: 2000 rupees for farmers! This is the date of payment!!

PM Kisan திட்டத்தின் கீழ் அடுத்த 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM Kisan) திட்டத்தின் 14வது தவணைக்காக காத்துகொண்டு இருக்கின்றனர். முதன்மையாக, 13வது தவணையைப் பிப்ரவரி 27ஆம் தேதி விவசாயிகளின் கணக்கில் அரசு செலுத்தியது அனைவரும் அறிந்த ஒன்று ஆகும். அப்போது 8.42 கோடி விவசாயிகளுக்கு 13ஆவது தவணைப் பணம் வழங்கப்பட்டது என்பது நினைவு கூறத்தக்கது.

அந்த தவணை வந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆகின்ற நிலையில், 14ஆவது தவணை குறித்த அப்டேட் தற்பொழுது வந்துள்ளது. இந்த PM Kisan திட்டத்தில், விவசாயிகளுக்கு, 14வது தவணையாக 2000 ரூபாயும், ஆண்டுக்கு, 6 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வழக்கமாக, பிஎம் கிசான் திட்டத்தின் தவணை ஏப்ரல் முதல் ஜூலை வரை வெளியிடப்படும். கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தில் பெறப்பட்ட 11வது தவணை 2022 மே 31ஆம் தேதியில் மாற்றப்பட்டு இருந்தது. ஆனால் இந்த முறை 14வது தவணை விரைவில் வங்கிக் கணக்கில் வர வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.

இந்த முறை மே 15ஆம் தேதி விவசாயிகளின் கணக்கில் தவணை பணத்தை மத்திய அரசு அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இந்த முறை பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், தவணைப் பணம் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில், உரிய நேரத்தில் பணம் வந்தால் விவசாயிகளுக்கு நிதி உதவி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் கூறப்படுகிறது.

நீங்கள் இந்த திட்டத்திற்குத் தகுதி பெற்றிருந்து இதில் பதிவு செய்ய வேண்டும் எனில், நீங்கள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் பதிவு செய்யலாம். PM Kisan வெப்சைட்டிலேயே இதற்கான வசதி இருக்கிறது. அதோடு, உங்களுக்கு அருகில் உள்ள பொதுச் சேவை மையத்தில் இத்திட்டத்துக்கு நீங்கள் விண்ணபிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

PM Kisan திட்டத்தில் விண்ணப்பிக்க விவசாயிகள் தங்களின் நில விவரங்கள், விவசாயிகளின் பெயர், ஆதார், மொபைல் நம்பர், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்கள் தேவைப்படுகின்றது. இதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதோடு, PM Kisan நிதியுதவியைப் பெறுவதற்கு கேஒய்சி சரிபார்ப்பு மிகவும் அவசியம் என்பது நினைவு கூறத்தக்கது.

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு தனியான விற்பனை அடையாள அட்டை!

5 மாதங்களுக்கு அந்துப்பூச்சி தாக்கப்பட்ட PDS அரிசிதான் கிடைக்கும்!

English Summary: PM Kisan: 2000 rupees for farmers! This is the date of payment!! Published on: 24 April 2023, 03:40 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.