PM Kisan நிதி ரூ.8000 ஆக உயர்வு! வெளியாகிறது புதிய அறிவிப்பு, சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் மின்மோட்டார் வழங்கும் திட்டம், அதிக மகசூல் செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் பரிசு அறிவிப்பு, வேளாண் கல்லூரி மாணவர்களால் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம், பருத்தியில் மகசூலை அதிகரிக்க, விவசாய கல்லூரி மாணவிகளின் செயல் விளக்கம், 2023-24 வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு கருத்துக்களைத் தெரிவிக்க விவசாயிகளுக்கு அழைப்பு முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: ட்ரோன் மானியம்|புதிய கூட்டுறவு நிலையங்கள்|TNAU|FPO Call Center|HDFC|தங்கம் விலை|காய்கறி விலை|வானிலை
1. PM Kisan நிதி ரூ.8000 ஆக உயர்வு! வெளியாகிறது புதிய அறிவிப்பு!!
மத்திய அரசின் பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை ரூ.8,000 மாக அதிகரிக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் மத்திய அரசின் பட்ஜெட்டில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகி வருகிறது. பிஎம் கிசான் நிதியை ரூ.6,ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் மத்திய அரசின் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
2. சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் மின்மோட்டார் வழங்கும் திட்டம்!
சிறு, குறு விவசாயிகள் மானியத்துடன் மின்மோட்டார், பம்பு செட் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். வேளாண்மை பொறியியல் துறை மூலமாக விவசாய பாசனத்திற்கு 5 ஏக்கர் வரை நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய மின்மோட்டார், பம்பு செட் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள பழைய மற்றும் திறனற்ற மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்புபவர்கள், தற்போது உள்ள டீசல் பம்பு செட்டுகளை எலக்ட்ரிக் மோட்டார் பம்பு செட்டுக்கு மாற்ற விரும்பும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின்படி நடப்பு நிதி ஆண்டில் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு 160, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 20 என மொத்தம் 180 எண்ணிக்கையில் ரூ.18 லட்சம் மானியத்தில் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Ration Card: புதிய ரேஷன் கார்டு|நெல் கொள்முதல் நிலையங்கள்|FPO Call Center|பால்பண்ணைத் தொழில்|இ-சந்தை
3. அதிக மகசூல் செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் பரிசு அறிவிப்பு!
அதிக மகசூல் செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 5 லட்சம் பரிசு அறிக்கப்பட்டுள்ளது. அதிக மகசூல் செய்யும் விவசாயிகள், பயிர் விளைச்சல் போட்டிகளில் பங்கேற்பதற்கு வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அறிவித்துள்ளது. வரிசை நடவு என, அழைக்கப்படும் திருந்திய நெல் சாகுபடி செய்து மாநில அளவில் முதல் இடம்பிடிக்கும் விவசாயிக்கு 5 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பாரம்பரிய ரக நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்ட அளவில் நடைபெறும் பயிர் விளைச்சல் போட்டியில் வேர்கடலை விவசாயிகளுக்கு 25 ஆயிரம், 15 ஆயிரம் என இரு பரிசுகளும், உளுந்து சாகுபடி செய்வோருக்கு 15 ஆயிரம், 10 ஆயிரம் என இரு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டிகளில் பங்கு பெற அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் சென்று விண்ணப்பிக்கலாம்.
சென்னை: TAMCO மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.20,000 லட்சம் கடன் உதவி
4. வேளாண் கல்லூரி மாணவர்களால் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்!
ஓசூர் அருகே அத்திமுகத்தில் உள்ள அதியமான் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டுமாணவிகள், ஊரக வேளாண்மை பயிற்சி அனுபவத்திற்காக, மண் மாதிரி சேகரிப்பு பயிற்சி நடத்தினர். இதனை அடுத்து தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுக்கா சாமிசெட்டிப்பட்டி கிராமத்தில் பச்சையப்பன் என்ற விவசாயியின் நிலத்தில் இந்த பயிற்சி நடந்தது. பயிற்சியில் வேளாண்மை கல்லூரியின் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் தையல்நாயகி, மற்றும் மாணவிகளான அக்ஷயா பச்சிகலா, கிருத்திலோஷ்னி, பூங்குழலி, பிரகதீஸ்வரி முதலானோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க: PM Kisan 13வது தவணை|மாடு வளர்ப்பு பயிற்சி|100 யூனிட் மின்சாரம்|புதிய மின் கட்டணம்|தங்கத்தின் விலை
5. பருத்தியில் மகசூலை அதிகரிக்க, விவசாய கல்லூரி மாணவிகளின் செயல் விளக்கம்!
ஆண்டிபட்டி அருகே ராஜதானி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பருத்தியில் மகசூலை அதிகரிக்க வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றுப்புறப் பகுதிகளில் தங்கி கிராம தங்கல் திட்டத்தில் தங்கிருந்து விவசாயிகளுக்கு அதிக மகசூல் பெரும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டிபட்டி அருகே ராஜதானி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு, முட்டை எண்ணெய் கலவை பயன்படுத்தி பருத்தியில் மகசூலை அதிகரிக்கலாம் என்று விவசாயிகளுக்கு மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.
6. 2023-24 வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு கருத்துக்களைத் தெரிவிக்க விவசாயிகளுக்கு அழைப்பு!
விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து, அவர்களின் வருமானம் உயர்வதற்காகத் தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கையினைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, உழவர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையினைத் தயாரிப்பதற்கு முன்னர், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்கப் பிரிதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களின் கருத்துக்களை கேட்டு, அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிக்க வேண்டி விவசாயிகளிடன் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: PM Kisan 13வது தவணை|ஆட்டோ வாங்க மானியம்|நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி|TNEB:100 யூனிட் இலவச மின்சாரம்
7. மலேசியாவுக்கு நாமக்கல்லிலிருந்து முட்டைகள் ஏற்றுமதி!
நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில், மொத்தம் 5.5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தியாகும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடு ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி முதல், இந்தியாவில் இருந்து குறிப்பாக நாமக்கல் பகுதிகளில் இருந்து விமானம் மூலம் மலேசியா நாட்டிற்கு முட்டைகள் ஏற்றுமதி தொடங்கி உள்ளது. மலேசியா நாட்டில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டாலும், அங்கு அவர்களுக்கு தேவையான அளவு முட்டை உற்பத்தி இல்லாததால் நமக்கல்லிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.
8. சுருக்குமடி வலையைப் பயன்படுத்த உச்சநீதி மன்றம் அனுமதி!
சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. அரிய வகை உயிரினங்கள், மீன் குஞ்சுகள், பவளப்பாறைகள் சிக்கி கொள்வதால் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், இந்த தடை உத்தரவை எதிர்த்து மீனவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அரசின் உத்தரவு சரியானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே சுருக்குமடி வலையை மீனவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை 12 நாட்டிக்கல் மைல்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
9. இருநாள் விவசாயத் திருவிழா மற்றும் கண்காட்சியினைத் தொடங்கி வைத்தார் வேளாண் இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி!
இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், ராஜஸ்தான் அரசுடன் இணைந்து, இரண்டு நாள் விவசாயத் திருவிழா-கண்காட்சி மற்றும் பயிற்சியை ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள தசரா மைதானத்தில் தொடங்கி வைத்தது. தொடர்ந்து இரு நாட்கள் நடைபெறும் எந்த நிகழ்ச்சி, மேம்பட்ட மற்றும் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறையில் முன்னணி வீரர். இக்கண்காட்சியை மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா மற்றும் இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ கைலாஷ் சவுத்ரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இக்கண்காட்சியில் சுமார் 15,000 விவசாயிகள், வேளாண் தொடக்க நிறுவங்கள், கார்ப்பரேட் வங்கியாளர்கள், விரிவாக்க தொழிலாளர்கள் மற்றும் விவசாய நிறுவங்களின் ஊழியர்கள் முதலானோர் கலந்துகொள்கின்றனர்.
10. கடலோர காவல்படையில் சேர இலவச பயிற்சி!
தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழகக் கடலோரப் பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 14.3.2022 முதல் 14.6.2022 வரை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 2 ஆவது அணிக்கான 90 நாட்கள் பயிற்சி வகுப்பு இவ்வாண்டில் பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கப்பட உள்ளது.
11. இரயில் பயணிகளுக்கு இலவச உணவு! வெளியான புதிய அறிவ்ப்பு!
எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தூர தேச ரயில்களான ராஜ்தானி, சதாப்தி மற்றும் தூரத்தோஸ் போன்ற பிரீமியம் ரயில்களில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்குவது குறித்து அறிவிப்பை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிட் அமைப்பான IRCTC வெளியிட்டுள்ளது. இது போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகளுக்கு ஏற்படும் நேர இழப்பின் போது, அவர்களுக்கு சைவ அல்லது அசைவ உணவு சார்ந்த ஏதேனும் ஒன்று 1999ம் ஆண்டு சட்டப்படி கட்டாயம் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் தங்களின் இந்த உரிமையை கேட்டு பெறலாம்.
12. தமிழக அரசு காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் தற்போது அரசு பணிகள் குறித்த அறிவுப்புகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. இப்பணியிடங்கள் பெரும்பாலும் போட்டித்தேர்வுகள் மூலமாகவே நிரப்பட்டு வருகிறது. ஒரு சில பணியிடங்களுக்கு மட்டும் கல்வித்தகுதியின் அடிப்படையில் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களைத் தமிழக அரசின் வேலைவாய்ப்பு பக்க இணையதளத்தில் பார்வையிடலாம்.
13. மேட்டூர் அணையில் நீர்வரத்து 815 கன அடியாகச் சரிவு!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 819 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 815 கன அடியாக சரிந்துள்ளது.
மேலும் படிக்க
பருத்தியில் மகசூலை அதிகரிக்க டிப்ஸ்: விவசாய கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்!
ஏற்றுமதி, விதை இருப்பு ஆகியவற்றை அதிகரிக்க உதவும் 3 புதிய கூட்டுறவு நிறுவனங்கள்
Share your comments